5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupattur: வெளியூரில் கணவன்.. உள்ளூரில் இரு இளைஞர்கள்.. இளம்பெண் கொலையில் ட்விஸ்ட்!

கதவும் திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையறையில் அரை நிர்வாண நிலையில் ரத்த காயங்களுடன் அந்த பெண் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tirupattur: வெளியூரில் கணவன்.. உள்ளூரில் இரு இளைஞர்கள்.. இளம்பெண் கொலையில் ட்விஸ்ட்!
விக்னேஷ் மற்றும் குமரேசன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Dec 2024 21:13 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலியல் உறவுக்கு மறுத்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்து கொலை செய்த  இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாத நிலையில் பெண்ணின் கணவர் பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இதன் காரணமாக மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இப்படியான நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி கடன் தொகை வசூலிப்பதற்காக பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். எப்போதும் வீட்டில் தனியாக இருந்து வரும் அந்தப் பெண்ணை பலமுறை அழைத்தும் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வராமல் இருந்துள்ளது.

மேலும் கதவும் திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையறையில் அரை நிர்வாண நிலையில் ரத்த காயங்களுடன் அந்த பெண் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் உடலை மீட்டு மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: Coimbatore: கோவை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா உயிரிழப்பு

சிக்கிய செல்போன் எண்கள்

இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. இப்படியான நிலையில் அந்தப் பெண்ணின் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்கள் யார் யார் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் இரண்டு எண்களில் இருந்து அடிக்கடி அந்த பெண்ணுக்கு அழைப்புகள் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எண்ணை கொண்டு விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் மற்றும் விக்னேஷ் ஆகிய இரண்டு பேருடைய எண்கள் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மாறி மாறி தொடர்பு 

அதாவது இறந்து போன பெண்ணுக்கும் குமரேசனுக்கும் கடந்த 7 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. மாதம் ஒருமுறை மட்டுமே கணவர் வந்து செல்லும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குமரேசன் சிங்கப்பூர் சென்று விட்டார். இந்த சூழலில் விக்னேஷூடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று பொழுதை கழித்துள்ளனர். இந்த நிலையில் தான் குமரேசன் ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு அப்பெண்ணுக்கும் விக்னேஷூக்கும் இடையேயான தொடர்பு பற்றி தகவல் தெரிந்துள்ளது.

Also Read: Coimbatore: ஓனரே இப்படி செய்யலாமா? – வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டில் கைவரிசை!

இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் நேராக அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அப்பெண் மறுக்கவே விக்னேஷூடன் தொடர்பில் இருப்பதால்தான் என்னை தவிர்க்கிறாய் என கூறி வாக்குவாதம் குமரேசன் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் குமரேசன் தாக்கியதில் அந்த பெண் மயங்கி விழுந்த நிலையில் அவருடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து குமரேசன் சென்றுவிட்ட நிலையில் சிறிது நேரத்தில் விக்னேஷ் வந்துள்ளார்.அவரும் அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அழைத்த நிலையில் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி அப்பெண் மறுத்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்த விக்னேஷ் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு பாலியல் உறவு வைத்துள்ளார். இதில் அந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Latest News