Crime: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – புதுச்சேரியில் 4 பேர் கைது!
Puducherry: கடந்த 30 ஆம் தேதி தனது பெற்றோருடன் கோபித்துக் கொண்ட அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாமல் இருந்ததால் பெற்றோர்களும் உறவினர்களும் சந்தேகமடைந்தனர். பதற்றமடைந்த அவர்கள் செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனையடுத்து இரவு முழுவதும் புதுச்சேரி முழுவதும் அச்சிறுமி தேடினார்.
பாலியல் வன்கொடுமை: புதுச்சேரியில் உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடுக்கிட வைக்கும் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை காணலாம். மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இதனிடைய கடந்த 30 ஆம் தேதி தனது பெற்றோருடன் கோபித்துக் கொண்ட அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாமல் இருந்ததால் பெற்றோர்களும் உறவினர்களும் சந்தேகமடைந்தனர். பதற்றமடைந்த அவர்கள் செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனையடுத்து இரவு முழுவதும் புதுச்சேரி முழுவதும் அச்சிறுமி தேடினார்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அக்டோபர் 31ஆம் தேதி பெரிய கடை காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து அவரது தாய் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தினார். இதற்கிடையில் நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் மதுபோதையில் சிறுமி ஒருவர் தனியாக நின்றிருந்ததை கண்டனர்.
அவரது அருகே சென்று விசாரித்த போது அவர் காணாமல் போன 16 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. அச்சிறுமி மிகவும் சோர்ந்து போய் இருந்ததால் உடனடியாக போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இப்போது எடுக்கப்பட்ட பரிசோதனைகள் அச்சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்தனர்.
Also Read: Crime: மகன் இறந்த துக்கம்.. விஷம் குடித்து பெற்றோர் தற்கொலை செய்த சோகம்!
இந்த சம்பவத்தில் சிறுமி அளித்த தகவல்கள் அடிப்படையில் கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காஜா மொய்தீன் மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
4 பேரும் தன்னை மாற்றி மாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி சொன்ன இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை புதுச்சேரி முழுவதும் சுற்றி காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி ஆட்டோ ஓட்டுனர் காஜா மொய்தின் ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் கட்டாயப்படுத்தி அவருக்கு மது கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்ற காஜா மொய்தீன் அவர் வழி தவறி வந்து விட்டதாகவும், சிறுமியை பையன் என தனது மனைவிடம் கூறி இரவு அங்கேயே தங்க வைத்துள்ளார். சிறுமி முடி வெட்டி இருந்ததால் காஜா மொய்தினீன் மனைவியும் அவரை சிறுவன் என நம்பியுள்ளார்.
Also Read: Nellai Crime News: ”அதிக லக்கேஜ் ஏன் ஏத்துற?” பயணி கன்னத்தில் அறைந்த நடத்துனர்.. அதிர்ச்சி வீடியோ!
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை அதிகாலை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு விடுதி வாசலில் காஜா மைதீன் விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த விடுதியில் இந்த 3 பேர் சிறுமி மது போதையில் இருப்பதை அறிந்ததும் விபரீத முடிவு எடுத்தனர். அவரை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து சென்னைக்கு அவரை அழைத்து வரும்போதும் பாலியல் வரும்போதும் பாலியல் வன்கொடுமை செய்தபடியே வந்துள்ளனர்.
இதன்பின்னர் சென்னை வந்ததும் சிறுமியை வாடகை கார் பிடித்து தனியாக புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுமி அளித்த தகவல்படி விடுதியில் சிசிடிவி காட்சிகளை கொண்டு தங்கி இருந்த சென்னையைச் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.