5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: 533 சவரன் கவரிங் நகைகள்.. சிக்கிய காரைக்குடி பேங்க் மேனேஜர்!

மக்கள் சேவைக்காக பயன்படும் வங்கியில் குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.  பொதுமக்களும் வங்கியை நாடி நகைக்கடன் பெறுவது என்பக்து தினசரி நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான். இப்படியான நிலையில் அனைத்து கிளைகளிலும் வருடாந்திர ஆய்வு நடைபெறுவது வழக்கம். கணக்கு வழக்கு தொடங்கி அனைத்து விதமான சேவைகளையும் ஆய்வு செய்து கிளைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும். 

Crime: 533 சவரன் கவரிங் நகைகள்.. சிக்கிய காரைக்குடி பேங்க் மேனேஜர்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Oct 2024 19:12 PM

காரைக்குடி: சிவகங்கை அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 533 சவரன் நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகள் வைத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மோசடி சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்தியாவில் பல வகையான அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுகின்றது. மக்கள் சேவைக்காக பயன்படும் வங்கியில் குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.  பொதுமக்களும் வங்கியை நாடி நகைக்கடன் பெறுவது என்பக்து தினசரி நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான். இப்படியான நிலையில் அனைத்து கிளைகளிலும் வருடாந்திர ஆய்வு நடைபெறுவது வழக்கம். கணக்கு வழக்கு தொடங்கி அனைத்து விதமான சேவைகளையும் ஆய்வு செய்து கிளைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

அந்த வகையில் கல்லல் பகுதியில் ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். மேலும் நகைக்கடன் வாங்கிச் செல்லும் பொதுமக்களும் ஏராளம் என கூறப்படுகிறது. இந்த  வங்கியில் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான ஆய்வு குழுவினர் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டனர். அப்போது கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அந்த வங்கி கிளையில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தனர். ஆனால் அவை அனைத்தும் உண்மையிலேயே தங்க நகைகள் தானா என்ற சந்தேகம் ஆய்வுக் குழுவுக்கு எழுந்துள்ளது.

Also Read: Diwali 2024: தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே.. பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

இதனைத் தொடர்ந்து முறைப்படி பரிசோதனை செய்ய முடிவு எடுத்ததில் அந்த நகைகள் அனைத்தும் கவரிங் என தெரியவந்தது. இதனால் ஆய்வுக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து வங்கி ஊழியர்களிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த ஒரிஜினல் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வங்கியில் வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் ஒரிஜினல் நகைகளை கைமாற்றப்பட்ட விஷயத்தில் வங்கி மேலாளர் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விசாரணையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த மொத்தம் 533 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் ரூ2.4 கோடி என கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் சிவகங்கை மாவட்ட போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கல்லல் வங்கி கிளை மேலாளர் விக்னேஷ், உதவி மேலாளர் ராஜாத்தி, மோசடிக்கு உடனடியாக இருந்ததாக ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: Ginger Benefits: ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் இஞ்சி.. பாலியல் சக்தியை அதிகரிக்கும்!

வங்கியில் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்த தகவல் பரவியதுடன் அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர். மேலும் வங்கியை முற்றுகையிட வாய்ப்பிருப்பதால் வங்கியை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் வாடிக்கையாளர்களின் நகைகளை மீட்டு ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளிலும் வங்கி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே வங்கி நகை மோசடி சம்பவடத்தில் கைதான 4 பேரில் ஒருவர் அதே ஊரை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்ற மூன்று பேரும் வங்கி ஊழியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. வங்கியில் நகை அடகு வைப்பது பாதுகாப்பு என்று அவசர காரணங்களுக்காக மக்கள் நாடி வரும் நிலையில், இப்படியான ஒரு மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதனிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீசார் இன்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பால் வண்டியை மடக்கி சோதனை செய்ததில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் 100 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா,கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்பாக ரமேஷ், மலைச்சாமி ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News