5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: சென்னை தொழிலதிபரிடம் வழிப்பறி.. தஞ்சாவூரில் 4 திருநங்கைகள் கைது

நந்தகுமார் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வளம்பக்குடி என்ற பகுதியில் இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளார். இதனிடையே அப்பகுதியில் நின்றிருந்த திருநங்கை ஒருவர் நந்தகுமாரிடம் சாப்பிட பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது பரிதாபப்பட்ட நந்தகுமார் ரூபாய் 300 கொடுத்து உதவியுள்ளார். தற்போது நந்தகுமாரின் மணிபர்ஸில் அதிகப்படியான பணம் இருப்பதை பார்த்த அந்த திருநங்கை சத்தம் போட்டு 3 திருநங்கைகளை அழைத்துள்ளார்.

Crime: சென்னை தொழிலதிபரிடம் வழிப்பறி.. தஞ்சாவூரில் 4 திருநங்கைகள் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 Nov 2024 17:01 PM

திருநங்கைகள் கைது: தஞ்சாவூரில் சென்னை பள்ளிக்கரணை சேர்ந்த தொழிலதிபரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் என்பவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் புதுக்கோட்டை வந்துள்ளார். மீண்டும் சென்னை திரும்பிய அவர் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வளம்பக்குடி என்ற பகுதியில் இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளார். இதனிடையே அப்பகுதியில் நின்றிருந்த திருநங்கை ஒருவர் நந்தகுமாரிடம் சாப்பிட பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது பரிதாபப்பட்ட நந்தகுமார் ரூபாய் 300 கொடுத்து உதவியுள்ளார். தற்போது நந்தகுமாரின் மணிபர்ஸில் அதிகப்படியான பணம் இருப்பதை பார்த்த அந்த திருநங்கை சத்தம் போட்டு 3 திருநங்கைகளை அழைத்துள்ளார்.

அவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து நந்தகுமாரை மிரட்டி அவரிடம் இருந்த  ரூ.50 ஆயிரம் பணம்,  கழுத்தில் இருந்து ஐந்து சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நந்தகுமார் இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் துரிதமாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ரோந்து போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட 4 திருநங்கைகளை தீவிரமாக தேடினர். இதனிடையே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றிக் கொண்டிருந்த 4 திருநங்கைகளும் பிடிபட்டனர்.

Also Read: Accident: அதிர்ச்சியில் மக்கள்.. தமிழ்நாட்டில் ஒரேநாளில் இத்தனை விபத்துகளா?

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களின் பெயர் சுபஸ்ரீ, ரஃபியா, மயூரி தேவயானி என தெரிய வந்தது. 4 திருநங்கைகளையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகையை மீட்டு நந்தகுமாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களால் சமூகத்தில் நல்மதிப்பு பெற்ற திருநங்கைகளுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ8 ஆயிரம் பணம் பறித்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை பீளமேடு காந்திமா நகரை சேர்ந்தவர் சந்தோஷ் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் காந்திமா நகர் ரயில்வே பாலம் அருகே நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நான்கு பேர் வழிமறித்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுதொடர்பான போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில்  விசாரணையில் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த கிஷோர், கமுதியைச் சேர்ந்த விஜயராமன், மேட்டூரைச் சேர்ந்த நவீதன், மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

Also Read: J&K Terrorist Attack: காஷ்மீரில் மீண்டும் அட்டகாசம்.. தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

கஞ்சா கடத்தியவர்கள் கைது

இதனிடையே தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் சிலர் கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் கம்பம் மெட்டு சாலையில் உள்ள பைபாஸ் சாலையில் இருந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சாக்குப்பையுடன் சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் அனைவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த சாக்குப்பையை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் காவல்நிலையம் விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதுச் செய்யப்பட்டவர்கள் கம்பம் குரங்குமாயன்  தெருவை சேர்ந்த சுஜித் குமார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள அன்னம்பார்பட்டியை சேர்ந்த ரஞ்சித் பாண்டி, கிஷோர்நாத் மற்றும் ஏழுமலை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

Also Read: TVK Conference: விறுவிறுப்பாக செல்லும் த.வெ.க., மாநாட்டு பணிகள்.. என்னென்ன ஸ்பெஷல்?

இவர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சிலுக்குவார்பேட்டையைச் சேர்ந்த சுபானி என்பவரிடமிருந்து கஞ்சா விலைக்கு வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை நான்கு பேரும் கேரளாவிற்கு கொண்டு செல்லும்போது போலீசாரிடம் பிடிபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆந்திரா கஞ்சா வியாபாரின் சுபானியை பிடிக்க தமிழக போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

Latest News