Crime: ரூ.1 கோடி கேட்டு தாய், மகள் கடத்தல்.. சினிமா பாணியில் பிடிக்கப்பட்ட 7 பேர்!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் அவரது குடும்பத்தினரை கார் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்து சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் நேற்று வழக்கம்போல சப்ரின் பேகம் தனது மகள் அல்வினா மரியத்துடன் சென்னையில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

Crime: ரூ.1 கோடி கேட்டு தாய், மகள் கடத்தல்.. சினிமா பாணியில் பிடிக்கப்பட்ட 7 பேர்!

கோப்பு புகைப்படம்

Published: 

19 Nov 2024 08:59 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாய் மற்றும் மகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய  7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த மாவட்டத்தை திடுக்கிட செய்த இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காணலாம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிஃப். இவர் அப்பகுதியில் உள்ள காந்தி சாலை காமராஜர் நகர் ஏரியாவில்  தனது மனைவி சப்ரின் பேகம் மற்றும் மகள் அல்வினா மரியம் ஆகியோரோடு வசித்து வந்தார். இதற்கிடையில் அல்தாப் தாசிஃப் மீது பணமோசடி வழக்கு ஒன்று உள்ளது. அவர் செய்யாறில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், நகை சேமிப்பு திட்டம் ஆகியவை நடத்தி அதன் மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக திருவண்ணாமலை பொருளாதாரம் குற்ற பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது.

Also Read: Crime: ஆளில்லா நேரத்தில் அத்துமீறல்.. இளம்பெண் அளித்த புகாரில் பிரபல பாடகர் கைது!

இந்த வழக்கால் சிறையில் இருந்த அல்தாப் தாசிஃப் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் அல்தாப் தாசிஃப் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் அவரது குடும்பத்தினரை கார் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்து சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் நேற்று வழக்கம்போல சப்ரின் பேகம் தனது மகள் அல்வினா மரியத்துடன் சென்னையில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு வசந்தகுமார் கார் மூலம் செல்வதற்காக ஏறியுள்ளார்.

ரூட் மாறிய கார்.. சிக்கிய கும்பல்

இருவரையும் ஏற்றிக் கொண்டு சென்ற அவர் திடீரென வேலூர் நோக்கி சென்று இருக்கிறது. காரில் இருந்த வசந்தகுமாரிடம் வழி மாறி செல்வது குறித்து சப்ரின் பேகம் கேட்டபோது சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்த நண்பர்களை எல்லாம் வசந்தகுமார் வரவழைத்து தாய் மற்றும் மகள் இருவரையும் சிறை பிடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சப்ரின் பேகத்தின் தாயார் ஹயாத் பேகத்தை வசந்தகுமார் வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மகள் மற்றும் பேத்தியை விட வேண்டும் என்றால் ரூ.1  கோடி வரை பணம் வேண்டும் என மிரட்டி உள்ளார். பின்னர் ரூ. 50 லட்சம் தருமாறு சொல்லி முதற்கட்டமாக ரூ.10 லட்சம்  உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் பதறிப் போன ஹயாத்தின் பேகம் உடனடியாக ராணிப்பேட்டை போலீசில் இந்த கடத்தல் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

Also Read: Crime: தொழிலதிபரிடம் ரூ.2.2 கோடி மோசடி.. வங்கி கணக்கை வாடகைக்கு விட்ட ஆட்டோ ஓட்டுநர்!

இதனடிப்படையில் விசாரணை தொடங்கிய போலீசார் தாய் மற்றும் மகளை கடத்தி சென்றவர்களை பிடிக்க திட்டம் தீட்டினர். அதன்படி நீங்கள் கேட்ட பணம் தர தயாராக உள்ளதாக கூறி அதனை ராணிப்பேட்டையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பணத்தைப் பெற்றுக் கொள்ள வந்த சிலரை ராணிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணை முடிவில் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கொண்ட கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டது. அனைவரையும் ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சப்ரின் பேகம் மற்றும் அவரது மகள் அல்வினா மரியத்தை போலீசார் பத்திரமாக மீட்டனர். ஹோட்டல் ஊழியர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை..!
ஆஸ்திரேலியாவில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியர்..!