5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: மனைவி, மகள் கொலை.. தொழிலாளி தற்கொலை முயற்சி.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!

Karur: செல்வகணேஷ் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் கூலித்தொழியாக வேலை பார்த்து வந்தார். இதனிடையே நேற்று காலை வெகு நேரமாகியும் இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாமல் இருக்கவே அருகில் இருந்த ஜன்னல் வழியாக அப்பகுதி மக்கள் வீட்டினுள் எட்டிப் பார்த்தனர்.

Crime: மனைவி, மகள் கொலை..  தொழிலாளி தற்கொலை முயற்சி.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 10 Nov 2024 15:33 PM

தொழிலாளி தற்கொலை முயற்சி: கரூரில் குடும்ப பிரச்னை காரணமான மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு விவிஜி அவரைச் சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் அப்பகுதியில் உள்ள கலைஞர் சாலை என்ற இடத்தில் தனது மனைவி கல்பனா மற்றும் 5 வயது மகள் சாருபாலாவுடன் வசித்து வந்தார். செல்வகணேஷ் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் கூலித்தொழியாக வேலை பார்த்து வந்தார். இதனிடையே நேற்று காலை வெகு நேரமாகியும் இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாமல் இருக்கவே அருகில் இருந்த ஜன்னல் வழியாக அப்பகுதி மக்கள் வீட்டினுள் எட்டிப் பார்த்தனர்.

அப்போது வீட்டினுள் ஒரு அறையில் கல்பனாவும், குழந்தை சாரதிபாலாவும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வெங்கமேடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தபோது கல்பனா மற்றும் சாரதிபாலா இருவரும் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

Also Read: கனடாவில் இந்து கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.. முக்கிய குற்றவாளியான இந்திரஜித் கோசல் கைது..

அதே சமயம் செல்வகணேஷ் மீது எந்தவித ரத்தக்காயமும் இல்லாத நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வ கணேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கொசு மருந்து குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெங்கமேடு போலீசார் அப்பகுதி மக்களிடமும், செல்வகணேஷ் மற்றும் கல்பனா குடும்பத்தினர் விசாரணை நடத்தினார்.

இதில் வெளியான முதற்கட்ட தகவல் அடிப்படையில், குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. செல்வகணேஷ் மற்றும் கல்பனா இடையே அடிக்கடி தகராறு ஏற்படுட்டு வந்ததாகவும், 2 பேருக்கு நேற்றும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வ கணேஷ் கத்தியால் கல்பனாவையும், குழந்தை சாருபாலாவையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செல்வ கணேஷ் அளிக்கப் போகும் தகவல் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: நோ டேட்டிங், நோ உடலுறவு.. போராட்டத்தில் குதித்த அமெரிக்க பெண்கள்.. காரணம் என்ன?

கர்நாடகாவிலும் இதேபோல் சம்பவம்

இதனிடையே கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தின் முல்கி தாலுகாவை சேர்ந்த கார்த்திக் பட் என்பவர் கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும்,  4 வயது மகனும் இருந்த நிலையில் இந்த தம்பதி கார்த்திக் பட்டின் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் சமீப காலமாக தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் பட்டிற்கும், பிரியங்காவுக்கும் இடையே மீண்டும் குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திக் பட் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து ஆத்திரம் தீராமல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு குழந்தையையும் அவர் கொன்றுள்ளார். இதன் பின்னர் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் அருகில் இருந்த ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று கார்த்திக் பட் மீது மோதியது.. இதில் அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தட்சிண கன்னடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News