Crime: சனிக்கிழமை மட்டுமே திருட்டு.. சென்னையில் சிக்கிய திருடன்!
Chennai: முதலில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் தொடர்ந்து சம்பவ நடைபெற்ற பகுதியில் உள்ள அத்தனை சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தும் போலீசார் திருடனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிசிடிவி காட்சிகளில் கொள்ளை சம்பவத்தில் ஏற்பட்ட நபர் முகத்தில் துணியால் சுற்றிக்கொண்டு கையில் இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு வீடுகளை நோக்கி செல்வது கண்டறியப்பட்டது.
திருட்டு சம்பவம்: சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் நடத்தப்பட்ட விசாலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருட சென்ற நேரம் போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. இந்த குற்ற சம்பவத்தில் திருடன் எப்படி பிடிபட்டான் என்பதை பற்றி காணலாம். சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூர், தரப்பாக்கம், தண்டலம், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் அடுத்தடுத்து பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போரூர் உதவி காவல் ஆணையர் கலியசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முதலில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் தொடர்ந்து சம்பவ நடைபெற்ற பகுதியில் உள்ள அத்தனை சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தும் போலீசார் திருடனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிசிடிவி காட்சிகளில் கொள்ளை சம்பவத்தில் ஏற்பட்ட நபர் முகத்தில் துணியால் சுற்றிக்கொண்டு கையில் இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு வீடுகளை நோக்கி செல்வது கண்டறியப்பட்டது. அந்த கம்பியால் பூட்டை உடைத்துதான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
Also Read: காற்றில் பரவிய விஷம்.. 2 குழந்தைகளின் உயிரை பறித்த எலி மருந்து!
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான அன்பு என்ற நபர் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்த நிலையில் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வித்தியாசமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதன்படி கொத்தனார் வேலை செய்யும் அன்பு திருட்டு சம்பவம் நடந்த குடியிருப்பு பகுதியில் புதிதாக வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. புதிதாக வந்துள்ள அந்த குடியிருப்புப் பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும்பணி கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது.
இந்த நிலையில் அன்பு அங்கேயே தங்கி இருந்து கொத்தனார் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். தான் மட்டுமே அங்கு இருந்ததால் இந்த திருட்டில் ஈடுபட அத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டார். மேலும் சனிக்கிழமை இரவுகளில் பெரும்பாலான வீடுகளில் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை கவனித்துள்ளார். பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவே சென்று விட்டு திங்கட்கிழமை அதிகாலை அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்புவதை நோட்டமிட்டுள்ளார்.
Also Read: Chennai: கிண்டி மருத்துவமனையில் இளைஞர் மரணம்.. உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
இதனைத் தொடர்ந்து எந்த வீட்டில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதை அறிந்துக்கொண்டு சனிக்கிழமை இரவு நேரங்களில் தங்கி இருக்கும் இடத்திலிருந்து சாவகாசமாக நடந்து சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளார். இரும்பு கம்பியைக் கொண்டு ஒவ்வொரு வீடுகளின் பூட்டையும் உடைத்து பணம், நகை ஆகியவற்றை திருடியுள்ளார். குறிப்பாக தனது திருட்டுக்கு சனிக்கிழமை நாள் குறித்து கைவரிசை காட்டியதை சொன்னதும் தான் போலீசாருக்கே இந்த திருட்டில் இப்படி ஒரு வித்தியாசமான விஷயம் இருப்பது தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.
இப்படியாக சனிக்கிழமைகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து அன்பு திருடியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இதுவரை செய்த திருட்டின் மூலம் ரூ. 1.50 லட்சம் பணம், 25 பவுன் நகை போன்றவை கொள்ளை அடித்துள்ளதையும் ஒப்புக்கொண்டார். ஆனால் அவரிடம் இருந்து 22 பவுன் நகைகளை மட்டுமே மாங்காடு போலீசாரால் கைப்பற்ற முடிந்தது. மேலும் கொத்தனாரான அன்பு மீது வேளச்சேரி, பள்ளிக்கரணை, சிட்லபாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. வாரம் முழுவதும் கொத்தனார் வேலை பார்த்துவிட்டு சனிக்கிழமை இரவு மட்டும் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் அன்பு ஈடுபட்டு வந்த தகவல் வெளியான நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பணத்தில் உல்லாசமான வாழ்க்கையும் வாழ்ந்து வந்துள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அன்பு சிறையில் அடைக்கப்பட்டார்.