Crime: மகன் இறந்த துக்கம்.. விஷம் குடித்து பெற்றோர் தற்கொலை செய்த சோகம்!

Coimbatore: கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிசாமி, வத்சலா ஆகிய இருவரும் கோவைக்கு வந்துள்ளனர். சிறிது நாட்கள் தங்கள் உறவினர் வீட்டில் தங்கி இருந்த அவர்கள் இருவரும் வேடப்பட்டி விகேவி ஸ்ரீநகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். இவர்களில் வத்சலா வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்துள்ளார். ஊர் மாறிய பின்னரும் அவர்களுக்கு மகன் நினைவாகவே இருந்துள்ளது.

Crime: மகன் இறந்த துக்கம்.. விஷம் குடித்து பெற்றோர் தற்கொலை செய்த சோகம்!

மகனுடன் பழனிசாமி மற்றும் வத்சலா

Updated On: 

05 Nov 2024 19:45 PM

தம்பதியினர் தற்கொலை: கோவையில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள பூலாவூரணியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது மனைவி வத்சலா மற்றும் 7 வயது மகனுடன் வசித்து வந்தார். பழனிசாமி வீட்டில் வைத்து மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்த நிலையில் வத்சலா தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் பழனிசாமியின் மகன் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளான்.

Also Read: Viral Video : கணவனின் ரத்தம் படிந்த படுக்கை.. மனைவியை வைத்து சுத்தம் செய்த மருத்துவமனை!

இதனால் பழனிசாமி மற்றும் வத்சலா இருவரும் உடைந்து போயினர். மகன் இறந்த நாளில் இருந்து தம்பதியினர் இருவரும் மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுடன் காணப்பட்டனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வந்தாலும் துக்கம் தாங்க முடியாமல்  இருவரும் தொடர்ந்து தவித்ததாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த சக குடும்பத்தினர் இரண்டு பேரையும் கோவை மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்லுமாறும்,  சிலகாலம் அங்கு தங்கி மனதை தைரியப்படுத்தி வருமாறு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிசாமி, வத்சலா ஆகிய இருவரும் கோவைக்கு வந்துள்ளனர். சிறிது நாட்கள் தங்கள் உறவினர் வீட்டில் தங்கி இருந்த அவர்கள் இருவரும் வேடப்பட்டி விகேவி ஸ்ரீநகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். இவர்களில் வத்சலா வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்துள்ளார். ஊர் மாறிய பின்னரும் அவர்களுக்கு மகன் நினைவாகவே இருந்துள்ளது.

மகன் தங்களை விட்டு போய்விட்டானே என்று நினைத்து நினைத்து பொழுதும் வருத்தப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மகன் சென்ற இடத்திற்கு தாங்களும் சென்று விட  பழனிசாமி மற்றும் வத்சலா முடிவு செய்தனர். அவர்களின் விபரீத முடிவை செயல்படுத்த நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி அவர்கள் நேராக  காந்திபுரத்தில் உள்ள காட்டூர் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

Also Read: Viral Video : இடம் இல்லாததால், ரயில் பெட்டியில் படுக்கை தயாரித்த பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆனால் காலையில் அறை உள்ளே சென்ற தம்பதியினர் மாலை வெகு நேரமாகியும் வெளியில்  நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.  இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர் நேராக அறைக்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் ஓங்கி கதவை தட்டிய போது கதவு பூட்டானது விலகி திறந்து கொண்டுள்ளது. அப்போது உள்ளே சென்று பார்த்த அந்த ஊழியருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அறையில் கணவன், மனைவி இரண்டு பேரும் வாயில் நுரை தள்ளியபடியே பிணமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியான ஊழியர் சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த மற்ற ஊழியர்களும் அருகில் இருந்து மக்களும் ஓடி வந்து பார்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தௌலத் நிஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தம்பதிகள் இருவர் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  அவர்கள் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தம்பதிகள் எதற்காக தற்கொலை செய்துக் கொண்டனர் என்பதை அறிய அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்ததில் கடிதம் சிக்கியது. அதனை பறிமுதல் செய்ததில் மகன் இறந்த துக்கத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!