Crime: காதல் ஜோடியை கடத்திய பெண் வீட்டார்.. தென்காசியில் நடந்த பரபர சம்பவம்!
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பழனிசாமி, கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் கடந்த மாதம் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிவகாசி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் திடீரென கிருஷ்ணவேணியின் தாய் அய்யம்மாள், தாய்மாமன் ஜெயக்குமார் மற்றும் சில உறவினர்கள் அங்கு வந்துள்ளனர்.
கடத்தல் சம்பவம்: விருதுநகரில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெண்ணின் உறவினர்கள் காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. 21 வயதான இவர் சிவகாசி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பழனிச்சாமிக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் வெம்பக்கோட்டை கொங்கன்குளத்தைச் சார்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பழனிசாமி, கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் கடந்த மாதம் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிவகாசி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் திடீரென கிருஷ்ணவேணியின் தாய் அய்யம்மாள், தாய்மாமன் ஜெயக்குமார் மற்றும் சில உறவினர்கள் அங்கு வந்துள்ளனர். தொடர்ந்து பழனிச்சாமி மற்றும் கிருஷ்ணவேணியின் காதலை ஏற்று வீட்டில் சேர்த்துக் கொள்வதாக கூறி காரில் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இருவரும் சென்ற காரை பழனிசாமியின் நண்பர்கள் பின்தொடர்ந்துள்ளனர். கார் தாயில்பட்டி செல்லாமல் நேராக தென்காசியை நோக்கி சென்ற நிலையில் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக வெம்பகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் கூட்டிச் சென்ற காரை தேடி சென்றனர். அதற்குள் தென்காசி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் திருவேங்கடம் மற்றும் குருவிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது குருவிகுளம் போலீசார் வாகன சோதனை நடத்துவதை பார்த்த கிருஷ்ணவேணி வீட்டார் சில அடி தூரங்களுக்கு முன்பே வண்டியை நிறுத்திவிட்டு இருவரையும் காருக்குள் வைத்து கொல்ல முயற்சித்தனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பில் கார் குலுங்கியதை அந்த வழியாக சென்ற கருப்பசாமி என்ற முதியவர் பார்த்துள்ளார். என்ன நடக்கிறது என காருக்குள் எட்டிப் பார்த்தபோது கிருஷ்ணவேணி, பழனிச்சாமி இருவரையும் கொல்ல செய்ய முயற்சி நடப்பதை பார்த்து சத்தம் போட்டார்.
Also Read: Ramanathapuram 144: அச்சச்சோ.. ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன் தெரியுமா?
கருப்பசாமி சத்தம் கேட்டு போலீசாரும் அங்கு வருவதைக் கண்ட கிருஷ்ணவேணி வீட்டார் இருவரையும் கீழே இறக்கிவிட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து குருவிகுளம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் கிருஷ்ணவேணி வீட்டார் சென்ற காரை விரட்டிப்பிடித்து வெம்பக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட காதல் ஜோடியை குருவிகுளம் காவல் நிலையத்தில் பெரியவர் கருப்பசாமி ஒப்படைத்தார். இருவரையும் தக்க சமயத்தில் காப்பாற்றிய கருப்பசாமிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே கிருஷ்ணவேணியின் தாயார் அய்யம்மாள், தாய் மாமன் ஜெயக்குமார், உறவினர்கள் மணிகண்டன், வேல்முருகன், சிவசுடலை ஆகிய ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தாயில்பட்டியில் உள்ள பழனிசாமி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.