Cyber Crime: ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்.. விழிப்புடன் இருப்பது எப்படி?

மணிகண்டன் என்பவர் மோசடி செய்யப்பட்டபணத்தை ஷபாகத் என்பவர் மூலம் USDD ஆக மாற்றம் செய்ய முயற்சி செய்துள்ளார். மேற்படி குற்றவாளிகளிடமிருந்து குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த சைபர் குற்ற செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட வடமாநில கும்பலை கைது செய்யவும் மோசடி செய்யபட்ட பணத்தை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

Cyber Crime: ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்.. விழிப்புடன் இருப்பது எப்படி?

கைது செய்யப்பட்ட நபர்கள்

Updated On: 

04 Nov 2024 17:01 PM

சைபர் குற்றவாளிகள்,WhatsApp மூலம் குழு தொடங்கி ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என அப்பாவி பொதுமக்கள் நம்பும் வகையில் Share Investment APP-களை உருவாக்கி அதில் பலரும் அதிக லாபம் பெற்றதுபோல போலியான செய்தி பரிமாற்றங்கள் செய்து பொது மக்களை நம்ப வைத்து Online Share Trading என்ற போர்வையில் பணம் பறித்து வருகின்றனர். அந்த வகையில், ரூ.14 கோடி வரை பொது மக்களை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “ மனுதாரருக்கு கடந்த ஏப்ரல் 2024-ம் தேதி வாட்சாப் மூலம் தொடர்பு கொண்ட சைபர் மோசடி கும்பலை சேர்ந்த ஒருவர் Black Rock Asset Management Business School என்ற நிறுவனம் வைத்திருப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மேற்படி Black Rock நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மாதத்தில் 500 % லாபம் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

மேற்படி நிறுவனத்திற்கு Approved SEBI இருப்பதாகவும் கூறி நம்பவைத்தும் மேற்படி முதலீடு மூலம் பெற்ற லாபத்தில் தனக்கு தர வேண்டும் என Service Charge 20% கூறியும் மனுதாரரை நம்ப வைத்து BRIIFLPRo என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார். அதன் மூலம் மனுதாரர் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 14 கோடியை முதலீடு செய்துள்ளார். மனுதாரர் தான் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் National Cyber Crime Reporting Portal- Cr.No. 32/2024, U/s. 420 IPC, 66D IT (Amendment) Act, 2008, கீழ் புகார் அளித்து மோசடி செய்யப்பட்ட பணம் வரவு வைக்கப்பட்ட 13 வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டன.

பின்னர் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையக சைபர் கிரைம் தனிப்படை குழுவினர் விரைந்து செயல்பட்டு மோசடி செய்யப்பட்ட பணம் ரூபாய் 21,50,000/- வங்கி கணக்கில் பெற்று பதுக்கிய செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவில் இருந்த சென்னை நீலாங்கரையை சேர்ந்த மதன், திருவள்ளூர்-திருநின்றவூரை சேர்ந்த சரவணபிரியன், ஆவடியை சேர்ந்த சதீஷ்சிங், புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத்மற்றும் மதுரை பொன்மேனியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் மணிகண்டன் என்பவர் மோசடி செய்யப்பட்டபணத்தை ஷபாகத் என்பவர் மூலம் USDD ஆக மாற்றம் செய்ய முயற்சி செய்துள்ளார். மேற்படி குற்றவாளிகளிடமிருந்து குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த சைபர் குற்ற செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட வடமாநில கும்பலை கைது செய்யவும் மோசடி செய்யபட்ட பணத்தை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

Also Read: 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய ஆக்சிஸ் வங்கி!

சைபர் கிரைமில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

  • பொதுமக்கள் இது போன்ற கவர்ச்சிகரமான தகவல்களை நம்பவேண்டாம் இதுபோன்ற மோசடிகளை அடையாளம் கண்டு கணினிசார் குற்றப் பிரிவு, அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை . தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
  • இது போன்ற அதிகபடியான லாபம் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்தால் அதில் மோசடிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. விழிப்புடன் இருக்க அறிவுறுத்தபடுகிறார்கள்.
  • தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.
  • மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்
  • சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.
  • உங்கள் வங்கி மற்றும் கடன் அட்டை (Credit Card) அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா சரிபார்க்கவும்.
  • மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்