Cyclone Dana: டானா புயல் எதிரொலி.. தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து!
டானா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு புறப்படும் மற்றும் வந்து செல்லும் 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டானா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு புறப்படும் மற்றும் வந்து செல்லும் 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- காரக்பூரில் இருந்து மதியம் 02.05 மணிக்கு விழுப்புரத்துக்கு இயக்கப்படும் 22603 என்ற எண் கொண்ட சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 24 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஷாலிமரில் இருந்து மாலை 03.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
- திருச்சிராப்பள்ளியில் இருந்து ஹௌராவுக்கு மாலை 5.40 மணிக்கு இயக்கப்படும் வண்டி எண் 12663 கொண்ட சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 24 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஹௌராவில் இருந்து இரவு 11.55 மணிக்கு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புறப்படும் 12839 எண் கொண்ட மெயில் எக்ஸ்பிரஸ் 24 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- ஹௌராவின் சந்த்ராகாச்சி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இடையே இயக்கப்படும் 06090 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் 24 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
- திப்ருகார் – கன்னியாகுமரி இடையே இரவு 7.55 மணிக்கு இயக்கப்படும் 22504 என்ற எண் கொண்ட விவேக் எக்ஸ்பிரஸ் 23 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7 மணிக்கு ஹௌராவுக்கு இயக்கப்படும் 12840 என்ற எண் கொண்ட சூப்பர் பாஸ்ட் மெயில் 23ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- புதுச்சேரியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹௌராவுக்கு இயக்கப்படும் 12868 எண் கொண்ட ரயில் 23ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு 7.50 மணிக்கு இருந்து ஷாலிமர் இடையே இயக்கப்படும் 22826 என்ற எண் கொண்ட சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 23ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
- புதுச்சேரியில் இருந்து மாலை 6.50க்கு புவனேஸ்வருக்கு இயக்கப்படும் 12897 சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 23 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு ஹௌராவுக்கு இயக்கப்படும் 12842 என்ற எண் கொண்ட ரயில் 24 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்திலிருந்து ஹௌராவின் சந்த்ராகாச்சி ரயில் நிலையத்துக்கு காலை 8.10மணிக்கு புறப்படும் 22808 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் 24 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
- தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு ஹௌராவின் சந்த்ராகாச்சி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் 06095 என்ற எண் கொண்ட ரயில் முழுமையாக 24 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- திருநெல்வேலியில் இருந்து இரவு 1.50 மணிக்கு ஷாலிமார் இடையே இயக்கப்படும் 06087 என்ற எண் கொண்ட ரயில் 24 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- கன்னியாகுமரியில் இருந்து திப்ருகாருக்கு மாலை 5.25 மணிக்கு இயக்கப்படும் 22503 என்ற எண் கொண்ட விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 23 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு ஹௌராவின் சந்த்ராகாச்சி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் 06089 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் 23 ஆம் தேதி முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
- 22606 என்ற எண் கொண்ட திருநெல்வேலியில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் புருலியாவுக்கு அதிகாலை 3 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 23 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.