Cyclone Dana: டானா புயல்.. எங்கே கரையை கடக்கும்? யாருக்கெல்லாம் கனமழை தெரியுமா? - Tamil News | Cyclone Dana Updates low pressure area formed over east central bay of bengal | TV9 Tamil

Cyclone Dana: டானா புயல்.. எங்கே கரையை கடக்கும்? யாருக்கெல்லாம் கனமழை தெரியுமா?

இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது.  கத்தார் நாடு தான் இந்த புயலுக்கு டானா என பெயரிட்டுள்ளது. டானா என்றால் காற்று, அழகு என்று அர்த்தமாகும். இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கிலோமீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. 

Cyclone Dana: டானா புயல்.. எங்கே கரையை கடக்கும்? யாருக்கெல்லாம் கனமழை தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

21 Oct 2024 09:06 AM

டானா புயல்: மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இது மேற்கு – வடமேற்கு திசையில் வந்து அக்டோபர் 22ஆம் தேதி காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (அக்டோபர் 23) இது புயலாக வலுப்பெற்று ஒரிசா, மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது.  அக்டோபர் மாதம் உருவாகும் இந்த புயலால் தமிழகத்திற்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில்  இது ஒடிசாவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் தமிழகத்தில் ஓரளவுக்கு மட்டும் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கத்தார் நாடு தான் இந்த புயலுக்கு டானா என பெயரிட்டுள்ளது. டானா என்றால் காற்று என்று அர்த்தமாகும். இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கிலோமீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

Also Read: Accident: அதிர்ச்சியில் மக்கள்.. தமிழ்நாட்டில் ஒரேநாளில் இத்தனை விபத்துகளா?

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று காலை 10 மணி வரை திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: Accident: அதிர்ச்சியில் மக்கள்.. தமிழ்நாட்டில் ஒரேநாளில் இத்தனை விபத்துகளா?

இதனிடைய வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் அக்டோபர்  23 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை இந்த எச்சரிக்கையானது மீனவர்களுக்கு விடப்பட்டுள்ளது.

முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பிரபல நடிகையுடன் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுதா?