Fengal Cyclone: ஃபெங்கல் புயல் எங்கே இருக்கிறது? கரையை கடக்கும் பகுதி எது? வானிலை விவரம்!
ஃபெங்கல் புயல்: வங்கக் கடலில் நாளை ஃபெங்கல் (Fengal Cyclone) என்ற புயல் உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நாளை ஃபெங்கல் (Fengal Cyclone) என்ற புயல் உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. குறைவான காலமே மீதி உள்ளது. இதுவரை பற்றாக்குறை அளவே மழை பெய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும் என பல மாதங்களுக்கு முன்னரே வானிலை நிபுணர்கள் கூறினர். ஆனால், அதுபோல மழை பொழிவு இல்லை. நவம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
ஃபெங்கல் புயல் எங்கே இருக்கிறது?
அதற்கேற்ப, காவரி, டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் பரவமாக மழை பெய்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் நாளை ஃபெங்கல் என்ற புயல் உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கி, நேற்று முன்தினம் தீவிர தாழ்வுநிலையாக மாறியது. நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
தற்போதைய நிலவரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலக்கை – திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே சுமார் 310 கி.மு தொலைவிலும், நாகப்பட்டினத்தில் தெற்கு – தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 710 கி.மீமு தொலைவிலும், சென்னையில் தென் கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
Also Read : கனமழை எதிரொலி.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெங்கு தெரியுமா?
கரையை கடக்கும் பகுதி எது?
இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு தான் ’ஃபெங்கல்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கல் புயல் இந்த புயல் இரு நாட்களில் மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபெனகல் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், எங்கு கரையை கடக்கும் என்று தகவல் எதுவும் இப்போது வெளிவரவில்லை. இருப்பினும், இந்த ஃபெங்கல் புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்கும்போது தீவிர புயலாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
அதாவது, 29ஆம் தேதி வாக்கில் சென்னை – புதுச்சேரி இடையே தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் பகுதியை இதுவரை வானிலை மையம் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபால, இந்த ஃபெங்கல் புயல் கரையை கடக்கும்போது அதி கனமழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Also Read : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!
டெல்டா மாவட்டம் + சென்னைக்கு மழை எச்சரிக்கை
ஃபெங்கல் புயல் காரணமாக இன்று முதல் 29ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய உள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.