Watch Video: நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள்.. அதிரடியில் இறங்கிய கடலோர காவல்படை.. திக் திக்!
Fengal Cyclone: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் சிக்கி தவித்த வந்த நிலையில், அவர்களை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மீட்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் சிக்கி தவித்த வந்த நிலையில், அவர்களை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மீட்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ஆம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதற்கு முன்பு புயலாக மாறும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு ஃபெங்கல் எனும் பெயரிடப்பட்டுள்ளது. காலையில் இருந்து நகராமல் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 3 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள்
தற்போது நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது. புயலாகவோ அல்லது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவோ கரையை கடக்கும்போது 50-60 கீ. மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். காற்றின் வேகம் தீவிரம் அடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இதனால் அவர்களும் கரை திரும்பி வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் கரை திரும்பிக் கொண்டிருந்த மீன்பிடி படங்குகள் இரண்டு, ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளன. இதில் இருந்த 6 மீனவர்களும் தவித்து வந்துள்ளனர். இவர்கள் 6 பேரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக் கொண்டனர்.
Also Read : உருவாகிறது தற்காலிக புயல்.. எங்கே, எப்போது கரையை கடக்கும்?
அதிரடியில் இறங்கிய கடலோர காவல்படை
Indian coast guard today rescued six fishermen and four others who were stranded in the Bay of Bengal due to the deep depression. pic.twitter.com/9HTd1CfhVL
— AIR News Trichy (@airnews_trichy) November 28, 2024
சிக்கிக் கொண்ட தகவலை உறவினர்களிடம் பகிர்ந்த 6 மீனவர்கள், உடனடியாக தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால், நேற்று முதல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் படகுகளில் சென்று மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால், இன்று பிற்பகல் கடலோர காவல்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முயன்றனர். அதன்படியே இன்று பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read : ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்னாச்சு? நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
6 மீனவர்களும் கடந்த 36 மணி நேரம் நடுக்கடலில் தவித்து வந்த நிலையில், இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடலூர் தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களை மீட்ட கடலோர காவல்படை அதிகாரிகளை பலரும் பாராட்டு வருகின்றனர்.