5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cyclone Remal: வங்கக்கடலில் உருவான ரிமல் புயல்.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

Cyclone Remal: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ரிமல் எனும் பெயர் சூடப்பட்ட புயல் நிலை கொண்டுள்ளது. அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக இன்று இரவு வலுப்பெற்று, நாளை நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Cyclone Remal: வங்கக்கடலில் உருவான ரிமல் புயல்.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
ரிமல் புயல் (மாதிரிப்படம்)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 May 2024 10:01 AM

ரிமல் புயல்: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ரிமல் எனும் பெயர் சூடப்பட்ட புயல் நிலவி வருகிறது.  கடந்த 23ஆம் தேதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை 05:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள- கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, இன்று காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக இன்று இரவு வலுப்பெற்று, நாளை நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வானிலை நிலவரம்:

ரிமல் புயலின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான் மழை பெய்யு வாயப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மே 26ஆம் தேதி வரை ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 28ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

Also Read:  புது வகையான பீர்கள் அறிமுகம்.. டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த பீர் விற்பனை…!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளான இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை வரை மாலை வரை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென் வங்கக்கடல் பகுதிகள், இதர மத்தியகிழக்கு, மத்தியமேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Also Read: பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் பலி… கோவையில் ஏற்பட்ட சோகம்..!

 

 

Latest News