Weather Alert: மக்களே உஷார்.. “இனி வரும் புயல்கள்..” மத்திய அரசு பகீர் வார்னிங்!

வானிலை: இனி வரும் நாட்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் பெரும் சவாலமாக இருக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் மத்திய அரசு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Weather Alert: மக்களே உஷார்.. இனி வரும் புயல்கள்.. மத்திய அரசு பகீர் வார்னிங்!

வானிலை (picture credit: Getty/PTI)

Updated On: 

09 Nov 2024 18:50 PM

இனி வரும் நாட்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் சென்னை பள்ளிக்கரணையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புவி வெப்பமயமாதலால் கடலில் வெப்பம் உயர்கிறது. கடலில் இருந்து மரைன் ஹீட் வேவ் வருகிறது. அதாவது, கடல் வெப்ப அலைகள் அடிக்கடி வருகிறது. எனவே, கடலில் வெப்ப அலைகள் எப்படி வருகிறது? எதனால் வருகிறது என்பதை பற்றி ஆய்வு செய்து வருகிறோம். மரைன் ஹீட் வேவ் காரணமாக வெப்பம் அதிகரிக்கும்.

மத்திய அரசு  எச்சரிக்கை

மேலும், கடல் வெப்ப அலை காரணமாக இனி வரும் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும். இதனால் தான் குறிப்பிட்ட இடத்தில் அதிக மழை பெய்கிறது. கடல் வெப்ப அலை காரணமாக அதிக மழை பொழியும்.

அதனை கணிப்பதும் கடினமாக இருக்கும். அண்டார்டிகாவில் நீருக்கடியில் ஒரு கிளாடரை அமைக்க உள்ளோம். இதன் மூலம் வெப்ப பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ள முடியும்” என்றார். உலக நாடுகளில் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

காலநிலை மாற்றம் மனித குலத்திற்கே பெரும் ஆபத்து என்றே சொல்லலாம்.  அதிக அளவில் மழை பொழிவதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதற்கும், புயல் சின்னங்கள் வருவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை காலநிலை மாற்றம் பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மே மாதம் முதல் ஜூலை வரை வெயில் கொளுத்துவம், சென்னையில் வெள்ள பாதிப்பு, வெள்ளத்தையே பார்க்காத மதுரையில் வெள்ளப்பெருக்கு என பல பிரச்னை இருக்கிறது.

Also Read : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 13,14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் கொட்டப்போகும் மழை.. பிற மாவட்டங்களில் எப்படி?

கனமழை எச்சரிக்கை

இப்படியான சூழலில், வெப்ப அலைகள் காரணமாக இனி வரும் நாட்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும் என்று  மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.  வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது தமிழகத்தை நோக்கி வரும் என்றும் அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. பொதுவாக அக்டோபர் 20ஆம் தேதி தான் மழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியே தொடங்கிவிட்டதாக வானிலை மையம் கூறியது.

இந்த நிலையில், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. அரசு தரும் மாதம் ரூ.5,000… தகுதிகள் என்ன?

நாளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல் 11 ஆம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிகப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?