Cyclone Fengal : வங்கக் கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. வெளுக்கப்போகும் மழை!
Chennai Rains: தென்மேற்கு வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. வரும் 25 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகவும், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஆகவும் இது உருமாறியது. இது படிப்படியாக வலுவடைந்து இலங்கையை நெருங்கியது. அதன்பிறகு வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவானது ஃபெங்கல் புயல்
இதற்கு ஃபெங்கல் எனும் பெயர் வைக்கப்பட்டது. ஆனால், பல்வேறு இயற்கை குறுக்கீடுகள் காரணமாக அது புயலாக மாறுவது தடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாது அந்த புயல் சின்னத்தின் நகரும் வேகமும் குறைந்தது. தொடக்கத்தில் 30 கி.மீ வேகத்தில் நகர்ந்தது. பின்னர், 18 கி.மீ வேகமாக குறைந்தது.
அதன்பிறகு 13 கி.மீ வேகமாக மேலும் குறைந்தது. நேற்று மணிக்கு 2 கி.மீ வேகத்தில் தான் நகர்ந்தது. இதனால் தமிழக கரையை நெருங்குவது மிகவும் தாமதமானது. அத்துடன் தமிழகத்தில் கனமழை தொடங்குவதும் தாமதப்பட்டது. இருந்தாலும், மேக கூட்டத்தின் விளைவாக ஒருசில இடங்களில் தூரல் மழை பெய்தது. இதனால் புயலாக உருவெடுக்காது என்று வானிலை மையம் கூறியது.
இந்த நிலையில், இன்று காலை 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகபட்டினத்திலிருந்து சுமார் கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
Also Read : நெருங்கும் புயல்… சென்னைக்கு அதி கனமழை அலர்ட்… வெதர்மேன் முக்கிய தகவல்!
எப்போது? எங்கே கரையை கடக்கும்?
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் வங்கக் கடலில் பெஃங்கல் உருவானது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை மதியம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை, காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே புயலாக கடக்கக்கூடும்.
Cyclonic Storm Fengal (pronounced as FENJAL) has formed over Southwest Bay of Bengal at 1430 hrs IST of today, the 29th November. #ChennaiRains
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 29, 2024
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை புயல் கரையை கடக்கும்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.
Also Read : மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்க.. அமித் ஷாவிடம் வலியுறுத்திய திருமாவளவன்!
மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.