Tiruchendur | திருச்செந்தூரில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள்.. அதில் இருக்கும் தகவல்கள் கூறுவது என்ன?
Stone Inscription | கடந்த 27 ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பல பகுதிகளில் விடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் கோயில்லுக்கு அருகில் உள்ள கடற்கரை சுமார் 100 அடி உள்வாங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோயில்கள் மற்றும் கோயில் குளங்களில் இத்தகைய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நூற்றாண்டுகளுக்கு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகே உள்ள கடலில் புயலின் காரணமாக கடற்கரை சுமார் 100 அடிக்கு மேல் உள்வாங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த கல்வெட்டுகள் மேலே தெரிந்துள்ளன. இரண்டு நூற்றாண்டுகள் பழமையாக கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், இந்த கல்வெட்டுகள் குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Rahul Gandhi : உ.பி.யின் சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா.. தடுத்து நிறுத்திய போலீஸ்!
கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த கல்வெட்டுகள்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 27 ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பல பகுதிகளில் விடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலுக்கு அருகில் உள்ள கடற்கரை சுமார் 100 அடி உள்வாங்கியது. அப்போது கோயிலுக்கு அருகில் உள்ள அருகில் உள்ள கடற்கரைக்கு சென்ற பகதர்கள் சிலர், அங்கு கல்வெட்டு இருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக இது குறித்து தொல்லியல் துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தொல்லியல் துறையினர், கல்வெட்டுகளை மீட்டு சோதனை செய்து வருகின்றன.
இதையும் படிங்க : Exclusive: இன்னும் 26 நாட்கள் இருக்கு.. புது புயலுக்கு வாய்ப்பிருக்கா? வெதர்மேன் பிரத்யேக பேட்டி!
100 ஆண்டுகள் முந்தையதாக இருக்கலாம் – தொல்லியல் துறையினர்
திருச்செந்தூர் கோயில் அருகே கல்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் தொல்லியல் துறையின் தலைவர் சுதாகர், அதே துறையில் பேராசிரியராக பணியாற்றும் மதிவாணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியாத நிலையில், கல்வெட்டுகளின் மீது மாவு கொட்டி எழுத்துக்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். அதன்படி, இந்த கல்வெட்டுகள் சுமார் 50 அல்லது 100 அஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று அந்த குழு கணித்துள்ளது. மேலும் அந்த கல்வெட்டுகளில் “மாதா தீர்த்தம்” மற்றும் “பிதா தீர்த்தம்” என எழுத்துகள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த கல்வெட்டுகள் சுமார் 17 வரிகளை கொண்டதாக இருப்பதாகவும் அந்த குழு கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்?
கல்வெட்டுகள் எதை குறிக்கின்றன
இந்த கல்வெட்டுகள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட ஆராய்ச்சியில் அவற்றில் வரலாற்று தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவை ஆன்மீகத்தை மையப்படுத்தி செதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கோயில்களில் புனித நீராடுவது எப்படி என்பது குறித்து அந்த கல்வெட்டுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கல்வெட்டுகளை சோதனை செய்யும்போது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அருகே உள்ள வைகுண்டர் கோயிலில் இருந்த மற்றொரு கல்வெட்டையும் தொல்லியல் குழு ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.