5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dengue: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Dengue Fever in TN: தமிழ்நாட்டில் 3 நாட்களில் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Dengue: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… சுகாதாரத்துறை எச்சரிக்கை!
மாதிரி படம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 20 May 2024 13:07 PM

பருவமற்ற காலங்களில் பெய்யும் மழையால் ஆங்காங்கே தேங்கும் நீரில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் இந்த வகை கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக அமைகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக அரசு சார்பில் மாநில முழுவதும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, கடுமையான மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 3 நாட்களில் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Also read… சாலையோரம் இருந்த மக்கள் மீது ஆசிட் வீச்சு.. இரவில் சென்னையை உலுக்கிய கொடூர சம்பவம்!

எனவே நோய் தடுப்பு மையங்களை அமைத்து டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலத்தில், நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ கருவிகள் படுக்கைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு கொசு உற்பத்தி நடைபெறும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் பருவமற்ற காலங்களில் பெய்யும் மழையால் தங்கள் வீடு மற்றும் வாழும் இடங்களை சுற்றி நீர் தேங்காமலும் கொசு உற்பத்தி ஆவதை முன்கூட்டியே தடுக்கவும் சுகாதாரத்துறை அறிவுருத்தியுள்ளது.

Latest News