TN Cabinet Reshuffle : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோவி செழியன் வரை.. யார் யாருக்கு என்ன துறை! - Tamil News | Department allocated for the minister recently took oath in Tamil Nadu cabinet | TV9 Tamil

TN Cabinet Reshuffle : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோவி செழியன் வரை.. யார் யாருக்கு என்ன துறை!

Updated On: 

29 Sep 2024 18:34 PM

TamilNadu Cabinet | புதியதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே துறைகளை கண்காணித்து வந்த அமைச்சர்களுக்கு துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

TN Cabinet Reshuffle : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோவி செழியன் வரை.. யார் யாருக்கு என்ன துறை!

செந்தில் பாலாஜி மற்றும் கோவி செழியன்

Follow Us On

தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல் நேற்று மாலை வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில், அதனை ஏற்று ஆளுநர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அமைச்சரவை மாற்றத்தை வெளியிட்டது. இதில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருடன் மேலும் 3 அமைச்சர்கள் நியமணம் செய்யப்பட்டிருந்தனர். அதேபோல் ஏற்கனவே அமைச்சரவையில் இருக்கும் 3 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். அதாவது செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் மற்றும் ராமசந்திரன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விடுப்பு தர மறுத்த மேனேஜர்.. அடுத்த 20 நிமிடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

யார் யாருக்கு என்ன என்ன துறை வழங்கப்பட்டுள்ளது

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில், அவர் இன்று அமைச்சராக பொருப்பேற்றார். அதனை தொடர்ந்து அவர் முன்பு கண்காணித்து வந்த மின்சார துறை அவருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவி செழியன்

திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், அமைச்சராக பதவியேற்ற நிலையில் இன்று அவருக்கு உயர்கல்வி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் பொன்முடி உயர்கல்வி துறையை கண்காணித்து வந்த நிலையில், தற்போது கோவி செழியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : உண்டியல் பணத்தை திருடும் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ராஜேந்திரன்

சேலம் வடக்கு  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேற்று அமைச்சராக பொருப்பேற்ற நிலையில், அவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சுற்றுலா துறையை ராமச்சந்திரன் கண்காணித்து வந்த நிலையில், தற்போது ராஜேந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம். நாசர்

ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செஞ்சி மஸ்தான் இந்த துறையை கண்காணித்து வந்த நிலையில், தற்போது எஸ்.எம். நாசருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tamilnadu Cabinet Reshuffle: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..

பொன்முடி டூ ராஜகண்ணப்பன்:

புதியதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே துறைகளை கண்காணித்து வந்த அமைச்சர்களுக்கு துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: திருச்சியில் 11 செ.மீ மழை பதிவு.. இன்றும் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் கா.ராமச்சந்திரன் தலைமை கொரடாவாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
இணையத்தை கலக்கும் டாப்ஸி பன்னுவின் லேட்டஸ்ட் ஆல்பம்
Exit mobile version