5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Update: கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை.. வானிலை சொல்வது என்ன?

இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Update: கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை.. வானிலை சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 17 Oct 2024 08:04 AM

இன்று காலை 05.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு நிலை வட தமிழ்நாடு மற்றும் தென் கடலோர ஆந்திரப் பிரதேச கடற்கரைகளை சென்னைக்கு வடக்கே நெருங்கியது. இது மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடற்கரையை புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே, சென்னைக்கு வடக்கே அருகில், அட்சரேகை 13.5 N மற்றும் தீர்க்கரேகை 80.2 E அருகில் கடந்தது. அதைத் தொடர்ந்து, அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, இன்று, 05.30 மணி நேர நிலவரப்படி கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட கடலோரத் தமிழ்நாட்டின் மீது நிலைக்கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதனை தொடர்ந்து 22 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மாலை முதல் நாளை காலை வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் மழை லேசான மழை பதிவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட மாவட்டங்களில் மழை பதிவாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.. இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

17.10.2024: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.10.2024 முதல் 20.10.2024 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

17.10.2024: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

17.10.2024: கர்நாடக – கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Latest News