5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Doctor Attack: மருத்துவருக்கு நடந்த கொடூரம்.. தமிழக டிஜிபி போட்ட முக்கிய உத்தரவு!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் கவனித்திற்கு வந்தால் உடனடியாக கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Chennai Doctor Attack: மருத்துவருக்கு நடந்த கொடூரம்.. தமிழக டிஜிபி போட்ட முக்கிய உத்தரவு!
டிஜிபி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Nov 2024 21:19 PM

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி போட்ட முக்கிய உத்தரவு

கூடுதல் ரோந்து காவலர்கள், ரோந்து வாகனங்களைப் பயன்படுத்தி அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் கவனித்திற்கு வந்தால் உடனடியாக கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவமனை டீன்கள் மற்றும் மருத்துவமனை பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தொடர்பில் இருக்க உத்தரவு பிறப்கிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக பெருங்களத்தூரைச் சேர்ந்த காஞ்சனா (50) என்பவர் புற்றுநோய் காரணமகா உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோயாளி காஞ்சனாவுடன் அவரது மகன் விக்னேஷ் (27) உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.

Also Read : தமிழ்நாட்டில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா? உடனே பாருங்க!

நடந்தது என்ன?

அப்போது வார்டுக்கு வரும் மருத்துவர் சிகிச்சை முறை குறித்து அவருக்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விக்னேஷ் தனது தாயாரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் சிறிது நாட்களின் தாயின் உடல்நிலை மோசமாகுவதை கண்ட விக்னேஷ், பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். புற்றுநோய் முற்றிய நிலையில், இங்கு அழைத்து வந்துளீர்கள் இனி காப்பாற்ற முடியாது என்று அங்கிருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் அரசு மருத்துவமனையில் 3 மாதங்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் தனது தாய் காஞ்சனாவுக்கு புற்றுநோய் முற்றியதாக நினைத்து, தனது தாய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பாலாஜி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். எனவே பாலாஜியை கொலை செய்த முடிவு செய்த அவர், நேந்று கிண்டியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு கத்தி ஒன்றை இடுப்பில் சொருகியபடி வந்துள்ளார்.

மருத்துவரை தாக்கியவர் கைது

இதனை அடுத்து, பாலாஜியின் அறைக்கு சென்ற விக்கேஷ், அவரிடம் தாய் உடல்நிலை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து, மருத்துவர் பாலாஜியை கையில் வைத்திருந்த கத்தியால் குத்தினார். மருத்துவரின் கழுத்து, காது உள்ளிட் இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் பாலாஜி உதவி கேட்டு அலறினார்.

உடனே மருத்துவரை குத்திவிட்டு சாதாரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது மருத்துவரின் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அங்கிருந்தவர்களிடம் கூறினர். சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்து மருத்துவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Also Read : தமிழகத்தில் பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

இதற்கிடையில், விக்னேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர், விக்னேஷ் மீது மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்படி, கிண்டி போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவி 127 (2), 132, 307, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷ் மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு, தலையில் என மொத்தம் 7 இடங்களில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவருக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளித்ததால் பாலாஜி உயிர்தப்பியதாக மருத்துவர்கள் கூறினர்.

Latest News