5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dharmapuri Election Results 2024 : திமுக வேட்பாளர் மணி வெற்றி… தருமபுரி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

தருமபுரி தொகுதி தேர்தல் முடிவுகள் : தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி, பாமக சார்பில் சவுமியா அன்புமணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் போட்டியிட்டனர்.   தருமபுரி தொகுதியில் பாமகவின் சவுமியா அன்புமணிக்கும், திமுகவின் மணிக்கும் கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் சவுமியா அன்புமணி முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சவுமியா வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவின் மணி 4 லட்சத்து 26 ஆயிரத்து 735 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றார்.

Dharmapuri Election Results 2024 : திமுக வேட்பாளர் மணி வெற்றி… தருமபுரி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!
தருமபுரி மக்களவைத் தேர்தல் முடிவுகள்
umabarkavi-k
Umabarkavi K | Published: 04 Jun 2024 19:22 PM

தருமபுரியில் திமுக வெற்றி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.  இதில், தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி, பாமக சார்பில் சவுமியா அன்புமணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் போட்டியிட்டனர்.   தருமபுரி தொகுதியில் பாமகவின் சவுமியா அன்புமணிக்கும், திமுகவின் மணிக்கும் கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் சவுமியா அன்புமணி முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சவுமியா வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவின் மணி 4 லட்சத்து 26 ஆயிரத்து 735 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றார்.  மேலும் பாமகவுன் சவுமியா அன்புமணி 4,07,370 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 19,365 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றார் சவுமியா அன்புமணி.  மேலும், அதிமுகவின் அசாகன் 2,93,629 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்தார்.  நாம் தமிழர் கட்சியின் அபினயாவுக்கு 65,381 வாக்குகள் கிடைத்தது.

முந்தைய தேர்தல் முடிவுகள்:

தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக 4 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் மற்றும் அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்று திமுகவின் செந்தில் குமார் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் 5,04,235 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும், தனித்து போட்டியிட்ட அமமுகவின் பழனியப்பன் 53,655 வாக்குகள் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் ருக்மணிதேவி 19,674 வாக்குகள் பெற்றனர். 2014 மக்களவை தேர்தலில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 வாக்குகள் பெற்று அதிமுகவில் இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.

தருமபுரி  தொகுதி: 

தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக தருமபுரி உள்ளது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் உருவான முதல் மாவட்டம் என்ற பெருமை தருமபுரியே சாரும். கடந்த 1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து தான் தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் அருகாமையில் உள்ள கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் ஒப்பிட்ட அளவில் வளர்ந்த மாவட்டமாக இருக்கும் போதிலும் தருமபுரி தொடர்ந்து பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் வன்னியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர நாயுடு, ரெட்டியார், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் வன்னியர்கள் இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் முக்கிய கட்சிகள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக களம் இறக்கி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி வெற்றி பெற்ற இரண்டு இடங்களில் தருமபுரி ஒன்று. இங்கு போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு திமுகவின் செந்தில்குமார் அன்புமணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

சட்டப்பேரவை தொகுதிகள்:

கடந்த 47 ஆண்டுகளில் தருமபுரி மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு 12 எம்.பிக்கள் சென்றுள்ளனர். இதில், வாழப்பாடி ராமமூர்த்தி, அர்ஜுனன், கே.வி.தங்கபாலு, பு.த.இளங்கோவன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேறு மாட்டங்களை சேர்ந்தவர்கள். அதேபோல, 4 முறை முறை பாமக சார்பில் இந்த தொகுதியில் எம்.பிக்கள் தேர்வாகியுள்ளனர். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதாவது, தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, அரூர் (தனி) உள்ளன.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

தருமபுரி தொகுதியில் மொத்தம் 12 லட்சத்து 42 ஆயிரத்து 825 வாக்காளர்கள் உள்ளனர்.

  1. ஆண் வாக்களர்கள் – 6,28,262
  2. பெண் வாக்காளர்கள் – 6,14,404
  3. மூன்றாம் பாலினத்தவர்கள் – 159

 

 

Latest News