5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dharmapuri Loksabha Results: தருமபுரியில் சவுமியா அன்புமணி முன்னிலை.. தொடரும் கடும் போட்டி!

ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்த தருமபுரி தொகுதியில் பாமகவின் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார். தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி, திமுக சார்பில் மணி, அதிமுக சார்பில் ஆர்.அசோகன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் தருமபுரியில் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி, பாமகவின் சவுமியா 16, 150 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, பாமகவின் சவுமியா அன்புணி 67,354 வாக்குகளும், திமுக வேட்பாளர் மணி 51,199 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் அசோகன் 46,332 வாக்குகளை பெற்றுள்ளனர்.

Dharmapuri Loksabha Results: தருமபுரியில் சவுமியா அன்புமணி முன்னிலை.. தொடரும் கடும் போட்டி!
சவுமியா அன்புமணி
umabarkavi-k
Umabarkavi K | Published: 04 Jun 2024 11:01 AM

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவில் ட்ரெண்ட் நொடிக்கு நொடி மாறி வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத விதமாக உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி 35 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளன. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக தலைமையில் இந்தியா கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும் பாஜக கூட்டணி ஒரு இடத்திலும் முன்னிலை வகுத்து வருகிறது. விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகனும் தேமுதிக வேட்பாளருமான விஜய பிரபாகரன் முன்னிலை வகிப்பு வருகிறார். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு நேர் மாறாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்த தருமபுரி தொகுதியில் பாமகவின் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார். தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி, திமுக சார்பில் மணி, அதிமுக சார்பில் ஆர்.அசோகன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் தருமபுரியில் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி, பாமகவின் சவுமியா 16, 150 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, பாமகவின் சவுமியா அன்புணி 67,354 வாக்குகளும், திமுக வேட்பாளர் மணி 51,199 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் அசோகன் 46,332 வாக்குகளை பெற்றுள்ளனர்.

Latest News