Dharmapuri: சாப்பிட்டதற்கு பணம் கொடுக்கணுமா.. ஷூவை காட்டிய எஸ்.எஸ்.ஐ.. சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என 2000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதன் அருகில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இப்படியான நிலையில் இந்த புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காவேரி என்பவர் பணியாற்றி வருகிறார்.
எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்: தருமபுரியில் உணவகத்தில் உணவு சாப்பிட்ட காவல்துறை அதிகாரி ஏற்கனவே நிலுவையில் உள்ள பணத்தைக் கேட்ட உரிமையாளரை தாக்க முற்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என 2000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதன் அருகில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இப்படியான நிலையில் இந்த புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காவேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். அப்படி சாப்பிட்டு விட்டு அதற்கான பணத்தை கொடுக்காமல் , கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பிறகு தருகிறேன் என சொல்லி விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: Ration Card : ரேஷன் கார்டில் இத்தனை வகைகள் இருக்கிறதா? உங்கள் கார்டு எந்த வகை என்று தெரிந்துக்கொள்ளுங்கள்!
இப்படியான நேற்று முன்தினம் வழக்கம்போல காவேரி சாப்பிட்டுவிட்டு பணம் நாளை தருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்றும் மாலை 4 மணிக்கு அவர் சாப்பிட வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் முத்தமிழ், நேற்று சாப்பிட்டதற்கு மீதி பணம் தர வேண்டும் என சொல்லி அதனைக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்எஸ்ஐ காவேரி, முத்தமிழை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணத்தை தூக்கி வீசிவிட்டு, கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கோபம் அடங்காமல் தன்னுடைய காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க முயன்றுள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள், ஹோட்டல் ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Mobile Listening : உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் மொபைல் போன்கள்.. உறுதி செய்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்!
அருகில் இருந்தவர்கள் தடுத்ததால் காவேரி அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி வைரலானது. தினமும் எஸ்எஸ்ஐ காவேரி, தங்களது உணவகத்தில் வந்து சாப்பிட்டு விட்டு முழுப் பணத்தை கொடுப்பதில்லை என உணவகம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. காவல்துறையினரை பகைத்து கொண்டால், தொழில் செய்ய முடியாது என்பதால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்புறம் தருவார் என எதுவும் பேச மாட்டோம். ஆனால் நேற்று சாப்பிட்ட பழைய பாக்கித்தொகையை கேட்டதால், தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல், காலில் அணிந்திருந்த ஷூவால் தன்னை தாக்க வந்தார் எனவும் முத்தமிழ் தெரிவித்தார். தொடர்ந்து இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் எஸ்எஸ்ஐ காவேரியை சஸ்பெண்ட் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவிட்டார்.