TVK first conference: தமிழக வெற்றிக் கழக மாநாடு.. தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா?
Tamilaga Vettri Kazhagam: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் மிகப்பிரமாண்டமாக நேற்று (அக்டோபர் 27) நடந்த இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடினர். இரண்டு தினங்கள் முன்பே மாநாடு நடைபெறும் இடங்களுக்கு வந்து தங்களுடைய இருப்பை பலரும் பதிவு செய்தனர். மதியம் 4 மணிக்கு மேல் தான் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் புதுப்படம் ரிலீசானது போல காலை 6 மணிக்கே மாநாடு நடைபெறும் இடத்துக்கு கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் படையெடுக்க தொடங்கினர்.
தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய் அரசியல் களத்திற்குள் வந்துவிட்ட நிலையில் அவர் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வெற்றிக்கரமாக நடைபெற்று முடிந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் மிகப்பிரமாண்டமாக நேற்று (அக்டோபர் 27) நடந்த இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடினர். இரண்டு தினங்கள் முன்பே மாநாடு நடைபெறும் இடங்களுக்கு வந்து தங்களுடைய இருப்பை பலரும் பதிவு செய்தனர். மதியம் 4 மணிக்கு மேல் தான் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் புதுப்படம் ரிலீசானது போல காலை 6 மணிக்கே மாநாடு நடைபெறும் இடத்துக்கு கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால் மதிய நேரத்துக்குள் 90 சதவிகித இருக்கைகள் நிரம்பியது. இதன் காரணமாக மாநாட்டு நிகழ்வுகளை சொன்ன நேரத்திற்கு முன்பாக தொடங்கி சொன்ன நேரத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டது.
மாநாட்டில் விஜய் பேசிய அரசியல் பேச்சுக்கள் அனைத்து தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண்
இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். யார் அவர் என்ற கேள்வியெல்லாம் எழுந்தது. இந்நிகழ்வை தொகுத்து வழங்கிய அப்பெண்ணி பெயர் துர்கா தேவி. இவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
மாநாடு முடிவுற்ற பிறகு துர்காதேவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தளபதி விஜய்க்கு இருக்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவர். தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டத்தில் பிறந்து என்றைக்காவது ஒருநாள் விஜய்யை பார்த்துவிட மாட்டோமா என ஏங்கியவர்களில் ஒருவர். அவரைப் பார்த்து ஒரே ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியமாக இருந்தது.
என்ன ஒரு தெளிவு …இது வரைக்கும் பார்த்த அரசியல் பேச்சை விட இத விட சிறந்த பேச்சு கண்டிப்பா இருக்காது.
தல ரசிகன் என்பதை தாண்டி அரசியலில் உன் கூட உன் தோழனா என்றும் நிற்பன் அண்ணா..!!!! ❤️😇🫂 @actorvijay
வெற்றி நிச்சயம் 🗳️👊 #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/jo2Rx78e4p
— AJITH (@ActorAJlTH) October 27, 2024
ஆனால் எதிர்பார்த்ததற்கு மேலாக எனக்கு கடவுள் செட் பண்ணி இந்த மாதிரி ஒரு வாய்ப்பை, இவ்வளவு பெரிய மேடையை எனக்கு கொடுப்பார் என கனவில் கூட கற்பனை செய்து பார்த்தது இல்லை. இப்படி ஒரு வாய்ப்பு அமைய முதலில் எனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முழு ஆதரவு அளித்து உற்சாகப்படுத்தினார்கள். அடுத்ததாக இந்த வாய்ப்பு கிடைக்க முயற்சி செய்ததே என்னுடைய அண்ணன் தான். அடுத்ததாக என்னுடைய கணவர் மற்றும் என் குடும்பத்தினர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read: TVK Maanadu: ”கூத்தாடினா கெட்ட வார்த்தையா?” மாநாட்டில் ஆவேசமான விஜய்!
உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை
மேலும் இந்த மாநில மாநாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களுக்கும், சின்ன வயதில் இருந்து உத்வேகப்படுத்துன தளபதி விஜய் அவர்களுக்கும், ரொம்ப ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய உணர்வை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. ஏதோ கனவில் இருந்து வந்த மாதிரி உள்ளது. தளபதி விஜய் மேல் தீராத காதல். அண்ணன் என்ற அவர்மீதான உணர்வு நாடி, நரம்பு எல்லாம் பதிந்து உள்ளது.
Also Read: TVK Vijay: அதிமுகவை சீண்டாத விஜய்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கணக்கு இதுதானா?
அதன் வெளிப்பாடாக வரும் கண்ணீரை விஜய்யின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இதுக்கு மேல வாழ்க்கையில பெரிய வாய்ப்பு இருக்கான்னு என தெரியாது. நான் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். தளபதி ரசிகையா நான் ஜெயித்து விட்டேன் என்பதை கெத்தாக சொல்வேன். மாநாட்டை தொகுத்து வழங்குவதில் கொஞ்சம் பதற்றம் இருந்தது.
தளபதிக்காக என்னுடைய தமிழ் வார்த்தையை பதிவு செய்ய வேண்டும் என நினைத்தது நடந்ததற்கு தமிழன்னைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் “சூப்பர் மா.. நல்லா பண்ணீங்க” என விஜய் சொன்னாரு” என துர்கா தேவி மனநிறைவோடு தெரிவித்துள்ளார்.