5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dindigul Fire Accident: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – இதுவரை 7 பேர் உயிரிழப்பு

Hospital Fire: திண்டுக்கலில் உள்ள நான்கு மாடி கொண்ட தனியார் மருத்துவமனையில் முழுவதும் தீ பரவியது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைப்பதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dindigul Fire Accident: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – இதுவரை 7 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மருத்துவமனையில் தீ
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 Dec 2024 23:37 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த ஏழு பேரில் மூன்று பேர் பெண்கள். இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திடீர் விபத்தானது டிசம்பர் 12ம் தேதி இரவு 9.30 மணியளவில் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள் நோயாளிகள் வெளியேற முடியாமல் மருத்துவமனைக்குள் சிக்கி கொண்டனர்.

இதையடுத்து, மொத்தமாக நான்கு மாடி கொண்ட தனியார் மருத்துவமனையில் முழுவதும் தீ பரவியது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைப்பதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் கட்டுக்கடங்காமல் எரிய தொடங்கியுள்ளது.

ALSO READ: Pudukottai: வீட்டில் வைத்து பிரசவம்.. அலட்சியத்தால் பறிபோன குழந்தை உயிர்!

இந்த  விபத்தில் மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டில் இருந்த 6-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாததால் தீயில் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும், கருகியும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த நபர்களில் 3 வயது சிறுவனும் ஒருவர் என்பது அதிர்ச்சியான தகவல். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் திண்டுக்கல் மாநகர காவல்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணிகளிலும் காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் எலும்பு மருத்துவமனை தீ பிடித்து எரிவதை அறிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, ஆர்டிஓ சக்திவேல், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ: School Leave: கனமழை எச்சரிக்கை.. 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

இந்தநிலையில், தனியார் மருத்துவமனைக்குள் இருக்கும் லிப்டில் மேலும் 6 பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  லிஃப்ட்டில் மேலும் 6 பேர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. லிஃப்டில் மாட்டிக்கொண்டவர்கள் நோயாளிகளின் உடன் இருந்தவர்கள் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News