இது திராவிட மண்… இணையத்தை கலக்கும் திவ்யா சத்யராஜின் போஸ்ட்!

Dhivya Sathyaraj: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் பல்வேறு படங்களில்நடித்து புகழ் பெற்றுள்ளார். மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். நியூட்ரிஷன் துறையில் M.Phil., பட்டம் பெற்றுள்ள திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இது திராவிட மண்... இணையத்தை கலக்கும் திவ்யா சத்யராஜின் போஸ்ட்!

திவ்யா சத்யராஜ்

Published: 

06 Jun 2024 10:31 AM

மக்களவை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இது திராவிட மண் எப்போதும் வெற்றி நமக்கே” என்று பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று கடந்த 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறது என தேர்தல் முடிவுகள் வெளியாகின. மீண்டும் பாஜக ஆட்சி என அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 மக்களவை தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சிகளே வெற்றிப்பெற்றனர். இரண்டாவது இடத்தில் அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சியினர் இடம் பிடித்திருந்தனர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் விடவே குறைவான வாக்குகளையே பெற்றனர் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் பல்வேறு படங்களில்நடித்து புகழ் பெற்றுள்ளார். மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். நியூட்ரிஷன் துறையில் M.Phil., பட்டம் பெற்றுள்ள திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

Also read… “பிரேம்ஜி திருமணம் செய்யும் பொண்ணு மீடியாவா?” – வெங்கட் பிரபுவின் வைரல் போஸ்ட்!

சமீபத்தில் திவ்யா சத்யராஜ் அரசியலில் குதிக்கப் போகிறார் என சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகின. நியூட்ரிஷியனாக இருக்கும் அவர் பாஜகவில் இணையப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. அதற்கு பதிலளித்த திவ்யா சத்யராஜ் வரும்‌ தேர்தலில்‌ போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான்‌. ஆனால்‌, எந்த ஒரு மதத்தைப்‌ போற்றும்‌ கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம்‌ இல்லை” என தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் திவ்யா சத்யராஜ் 40/40 என பதிவிட்டு இது திராவிட மண். எப்போதும் வெற்றி நமக்கே என பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாகப் பகிறப்பட்டு வருகின்றது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?