5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? – இன்று இரவு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இன்று இரவு 12.35 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 6.30 மணிக்கு திருச்சியை சென்றடையும் நிலையில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் மறு மார்க்கமாக நாளை காலை 9:30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.

Diwali 2024: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? – இன்று இரவு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Oct 2024 16:58 PM

சிறப்பு ரயில்கள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று இரவு 3 முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சொந்த ஊருக்கு திரும்பும் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். அதன்படி இன்று இரவு 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கநல்லூர், வாலாஜா ரோடு, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செமல்பட்டி, மொரப்பூர், பொம்மிடி, சேலம்,  சங்ககிரி,  ஈரோடு, திருப்பூர் வழியாக நாளை காலை 7:00 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்டம் பொடனூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக நவம்பர் 3 ஆம் தேதி காலை 7.45 மணிக்கு பொடனூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: November Month: கந்த சஷ்டி, கார்த்திகை மாத பிறப்பு.. நவம்பரின் முக்கிய விசேஷ தினங்கள்!

அதே சமயம் இன்று இரவு 12.35 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 6.30 மணிக்கு திருச்சியை சென்றடையும் நிலையில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் மறு மார்க்கமாக நாளை காலை 9:30 மணிக்கு திருச்சியில் இருந்து இயக்கப்பட்டு இரவு 8.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Aavin : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய வியாபாரம்.. ரூ.115 கோடி வருமானம் ஈட்டிய ஆவின்!

அதேபோல் இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு முன்பதிவிலாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிலியூர், கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக நாளை காலை 5.45 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மறுமார்க்கமாக நாளை மதியம் 12 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 8.45 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவில்லா ரயில்களை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News