Train Service: சென்னை மக்கள் கவனத்திற்கு.. நாளை ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை போக்குவரத்தின் அச்சாரமாக பார்க்கப்படும் மெட்ரோ ரயில்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகள் சரியாக பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றை அடைய மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “ தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் இன்று (அக்டோபர் 30) மெட்ரோ ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்கள் இயக்கம்: சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்டோபர் 31) ஆம் தேதி புறநகர் ரயில்கள் இயக்கம் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தெற்கு ரயில்வே சார்பில் தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் உள்ளதால் ஊர் திரும்ப முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ள மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை சென்னையில் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், அரக்கோணம், சூலூர் பேட்டை, செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்கங்களில் இந்த அட்டவணை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் சாலைகளில் பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் மக்கள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் மக்கள் கோயில், பூங்கா, கடற்கரை, வணிக வளாகங்கள் ஆகிய இடங்களுக்கு படையெடுத்து செல்வது வழக்கமாகும். சென்னை போக்குவரத்தில் முக்கிய அம்சமாக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில்களின் விரைவு சேவை
சென்னை போக்குவரத்தின் அச்சாரமாக பார்க்கப்படும் மெட்ரோ ரயில்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகள் சரியாக பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றை அடைய மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “ தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் இன்று (அக்டோபர் 30) மெட்ரோ ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டு பின்வரும் அட்டவணையின் படி இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
அதன்படி காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்கு முதல் மெட்ரோ இரயில் புறப்படும் எனவும், கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? தீபாவளி நாளில் காத்திருக்கும் பரிசு!
அதேபோல நீல வழித்தடமான விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும் என்றும் நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி நாளில் மெட்ரோ சேவை
மேலும் தீபாவளி தினமான அக்டோபர் 31 ஆம் தேதி மற்றும் நவம்பர் 1 ஆம் தேதி மெட்ரோ இரயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும், காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்பதால் பொதுமக்கள் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.