Diwali Special Bus: தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. சென்னை மக்கள் எங்கு செல்ல வேண்டும்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் சென்னையில் இருந்து இயக்கப்படும் தினசரி 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 3 நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகள் சென்னையில் இருந்தும், மற்ற ஊர்களில் இருந்து 2,910 பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் மொத்தம் 14, 086 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு பேருந்துகள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தவிர்த்து சனி, ஞாயிறு வார விடுமுறை வருகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் தயாராகி வருகின்றனர்.
கடைவீதிகளிலும், பட்டாசு கடைகளிலும் கூட்டம் அலைமோதும் நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சென்னை தாம்பரம், தாம்பரம் சானடோரியம், கேகே நகர், மாதவரம், கோயம்பேடு ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த முறை 3 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் சென்னையில் இருந்து இயக்கப்படும் தினசரி 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 3 நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகள் சென்னையில் இருந்தும், மற்ற ஊர்களில் இருந்து 2,910 பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் மொத்தம் 14, 086 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் எஸ்.இ.டி.சி என்ற இணையதளம் வழியாகவும், மொபைல் செயலி வழியாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கே செல்ல வேண்டும்?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, திருவனந்தபுரம், செங்கோட்டை,கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி தேனி திருப்பூர் பொள்ளாச்சி காரைக்குடி ராமேஸ்வரம், சேலம், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, ஜெயங்கொண்டம், வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரி, விருத்தாச்சலம், பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், மதுரை, ஆகிய வழித்தடங்கள் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்
கோயம்பேடு பேருந்து நிலையம்: வேலூர், திருப்பத்தூர், ஆற்காடு, ஆரணி, காஞ்சிபுரம், ஓசூர், செய்யாறு, பெங்களூரு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் ஆகியவை இயக்கப்படும். மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி வழித்தடப் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரம் பேருந்து நிலையம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.