Diwali 2024: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்!
Deepavali 2024: நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வியாழக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில், அதன் பிறகு சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. நடுவில் வெள்ளிக்கிழமை மட்டும் பணிநாளாக இருந்த நிலையில் வெளியூர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை விட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
தீபாவளி பண்டிகை: பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் நவம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வியாழக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில், அதன் பிறகு சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. நடுவில் வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்த நிலையில் வெளியூர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை விட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Also Read: Indian Railways: காலி பணியிடங்களில் முன்னாள் ஊழியர்கள்.. ரயில்வே முடிவுக்கு பெருகும் எதிர்ப்பு!
கடந்த சில ஆண்டுகளாகவே பண்டிகை தினங்கள் வந்தால் அதன் முந்தைய நாள் அல்லது பிந்தைய நாள் விடுமுறை விடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால் வெளியூரில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாட முடிகிறது. அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த நிம்மதியுடன் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்கின்றனர்.
தீபாவளி பண்டிகை என்றாலே நம் மனதிற்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாகும். புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துகள், கோயிலின் சிறப்பு வழிபாடு என அன்றைய ஒரு நாள் முழுக்க முழுக்க கொண்டாட்டங்களின் வடிவமாக இருக்கும். ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விதவிதமாக திட்டங்களோடு காத்திருப்பது வழக்கம். ஆனால் வெளியூரில் வேலை பார்க்கும் பொதுமக்கள் பலருக்கும் தீபாவளி சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினரை காணும் நிகழ்வாகவே உள்ளது. அதிலும் ஒரு நாள் விடுமுறை என்பது கண்டிப்பாக போதாது என்ற குறை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதனை போக்கும் வழியில் கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை நாட்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுமுறை விடும் வழக்கத்தை தமிழக அரசு பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: தமிழ் எங்கள் மூச்சு.. ஆனால் உங்க வரலாறு?.. ஆளுநரை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்துவிட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதனைப் பொருட்படுத்தாது ஆம்னி பேருந்துகளிலும் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் கடைவீதிகளிலும் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. உதிரி பொருட்களால் பட்டாசு விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் போட்டி போட்டுக் கொண்டு விதவிதமான கண்கவர் பட்டாசுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் ஆங்காங்கே பட்டாசு கடைகளும் முளைத்துள்ளது. இப்படியாக தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவதற்கான சூழல் உண்டாகி வரும் நிலையில் அதனை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.