தீபாவளி விடுமுறை.. கார்களில் சொந்த ஊர் செல்பவர்கள் இந்த ரூட்டில் போகாதீங்க.. அமைச்சர் அறிவிப்பு! - Tamil News | Diwali holidays car and private vehicles to avoid tambaram perungalathur route says minister sivasankar | TV9 Tamil

தீபாவளி விடுமுறை.. கார்களில் சொந்த ஊர் செல்பவர்கள் இந்த ரூட்டில் போகாதீங்க.. அமைச்சர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை: தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு கார், இதர வாகனங்களில் செல்பவர்களுக்கு தமிழக போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சொந்த ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் பெருங்களுத்தூர், தாம்பரம் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

தீபாவளி விடுமுறை.. கார்களில் சொந்த ஊர் செல்பவர்கள் இந்த ரூட்டில் போகாதீங்க.. அமைச்சர் அறிவிப்பு!

கார்கள்

Updated On: 

22 Oct 2024 10:44 AM

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு கார், இதர வாகனங்களில் செல்பவர்களுக்கு தமிழக போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சொந்த ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் பெருங்களுத்தூர், தாம்பரம் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.  தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 31, நவம்பர் 1,2,3ஆம் தேதி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பலரும் சொந்து ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்காணோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள்.

தீபாவளிக்கு 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்:

இதனால், சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும், பொதுமக்கள் எந்த சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் அரசு சார்ந்து ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கம் அறிவித்துள்ளார். அதாவது, தமிழகம் ழுழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 28ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தொடர் கனமழை.. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு நவம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2,092
பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பேருந்துகள் , ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு
ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12,606 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3 இடங்களில் தீபாவளி பேருந்துகள்:

சென்னையில் 5 இடங்களுக்கு பதில் இம்முறை கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் இருந்து மட்டுமே தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர், கும்பகோணம், தஞ்சை மார்க்கமாக செல்லும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர், திருத்தணி மார்க்கமாக செல்லும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: காவலர்களை ஆபாசமாக பேசிய காதல் ஜோடி.. 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.. நடந்தது என்ன?

கார்களில் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் செல்வார்கள். அதே நேரத்தில் பலரும் கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்வார்கள். இதனால், பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் பேருந்துகள் அனைத்தும் தாமதமாக செல்லும்.

இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,  காரில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் வெளிச்சுற்று சாலையைப் பயன்படுத்த அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

புகார் அளிக்கலாம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044- 24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!