தீபாவளி விடுமுறை.. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு! - Tamil News | diwali holidays omni bus ticket booking tamilnadu government announces complaint numbers over fare price | TV9 Tamil

தீபாவளி விடுமுறை.. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

தீபாவளி விடுமுறை: தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலு செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி விடுமுறை.. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

ஆம்னி பேருந்து

Updated On: 

24 Oct 2024 15:49 PM

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 31, நவம்பர் 1,2,3ஆம் தேதி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். குறிப்பாக, சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில் என செல்வார்கள். இந்த நேரத்தில் ரயில், பேருந்து என அனைத்திலும் கூட்டம் அலைமோதும். இதனால் மக்கள் பெரும்பாலும் ஆம்னி பேருந்துகளில் செல்ல விரும்புவார்கள். ஆனால், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்காக இருக்கும். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கட்டணம் அதிகமாகவே இருக்கும். இதுபற்றி மக்களும்  ஆண்டுதோறும் புகார் அளித்து வருகின்றனர்.

புகார் எண் அறிவிப்பு:

இருப்பினும், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பண்டிகை காலங்களில் அதிமாகவே இருக்கும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்ந சூழலில் தான், தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலு செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044 – 2479002, 044 2628045, 044 – 26281611 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. 700 சிசிடிவி கேமிராக்கள், 1500 எல்.ஈ.டி விளக்குகள்.. எங்கே ? எப்போது? முழு விவரம்..

சிறப்பு பேருந்துகள்:

தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மட்டும் 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெங்களூரு, திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், வழக்கம் போல் இயங்கும் திருச்சி, கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், வந்தவாசி, போளூர், தஞ்சை உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் மூன்று நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\

Also Read: தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. 18 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை..

மேலும், பிற ஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்கு மூன்று நாட்களுக்கு 2910 பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு நவம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்பு பேருந்துகள் மூன்று நாட்களுககு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 12,606 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?
சியா விதைகளுடன் இந்த உணவுகளை ஒரு போதும் சேர்க்கக்கூடாது..!
இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!