Diwali Special Train: தீபாவளி விடுமுறை.. நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு! - Tamil News | diwali-special-train announced between tirunelveli and tambaram | TV9 Tamil

Diwali Special Train: தீபாவளி விடுமுறை.. நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

deepavali 2024: வெளியூரில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கன்னியாகுமரி - சென்னை சென்ட்ரல், தாம்பரம் - கன்னியாகுமரி சென்னைசென்ட்ரல் - செங்கோட்டை ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தது.

Diwali Special Train: தீபாவளி விடுமுறை.. நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

23 Oct 2024 15:39 PM

தீபாவளி சிறப்பு ரயில்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வெளியூரில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கன்னியாகுமரி – சென்னை சென்ட்ரல், தாம்பரம் – கன்னியாகுமரி சென்னைசென்ட்ரல் – செங்கோட்டை ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: Diwali Special Trains: மக்களே ரெடியாகுங்க.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இப்படியான நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வசதியாக தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 3 தேதி திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கும், நவம்பர் 4ஆம் தேதி தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும் விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது திருநெல்வேலியில் புறப்பட்டு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம்,  பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read” ஜோசியராக மாறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவில் ஒருபோதும் விரிசல் இருக்காது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

இந்த சிறப்பு ரயில் நவம்பர் 3 ஆம் தேதி திருநெல்வேலியில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (நவம்பர் 4) காலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 4 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து மதியம் 2:30க்கு புறப்படும் சிறப்பு முறையில் மறுநாள் (நவம்பர் 5) அதிகாலை 5.15 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சாதாரண படுக்கை வசதி, மூன்றாம் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி ஆகிய டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தென்மாவட்ட சிறப்பு ரயில்கள்

வழக்கமாக ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் விதிமுறை அமலில் இருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. முன்பதிவு  தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் நோக்கி செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தொடர்ச்சியாக எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் 120 நாட்களாக இருந்த முன்பதிவு காலம் 60 நாட்களாக கடந்த வாரம் குறைக்கப்பட்டது.

இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்ட அதற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மறுபுறம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும் ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட்டுகள் விற்று  தீர்ந்து விட்டது. இப்படியான நிலையில் வெளியூரிலிருந்து சொந்த ஊர் திரும்ப மக்கள் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட தாம்பரம் – கன்னியாகுமரி இடையேயான ரயில் அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய மூன்று தினங்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம்,விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7 ஆகிய  நாட்களில் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் , சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5ஆம் தேதி, மறுமார்க்கமாக அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோயில், வள்ளியூர்,திருநெல்வேலி, கோவில்பட்டி ,சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் - அமேசான்!
குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?
பட்ஜெட்டில் பார்க்கக்கூடிய உலக நாடுகள் என்னென்ன தெரியுமா?
நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!