5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Special Train: தீபாவளி சிறப்பு ரயில்கள் டிக்கெட் முன்பதிவு.. நிமிடங்களில் காலியான டிக்கெட்டால் அதிர்ச்சியில் மக்கள்..

தென்னக ரயில்வே மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தாம்பரம் – கன்னியாகுமரி இடையே அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய 3 தினங்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 06049/ 06050 என்ற எண் கொண்ட இந்த ரயிலானது கன்னியாகுமரியில் இருந்து மேற்குறிப்பிட்ட நாட்களில் மதியம் 03.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diwali Special Train: தீபாவளி சிறப்பு ரயில்கள் டிக்கெட் முன்பதிவு.. நிமிடங்களில் காலியான டிக்கெட்டால் அதிர்ச்சியில் மக்கள்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Oct 2024 08:57 AM

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு மக்கள் செல்வார்கள். இதற்காக முக்கியமாக பேருந்து போக்குவரத்து அல்லது ரயில்களையே நம்பி உள்ளனர். முன்னதாக ரயில்களில் டிக்கெட் முன் பதிவு என்பது 120 நாட்களாக இருந்தது. ஆனால் தற்போது அது 60 நாட்களாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயா காலியானது.

அதாவது அக்டோபர் 31 ஆம் தேதிக்கான டிக்கெட் முன் பதிவு, ஜூன் 30 ஆம் தேதி முதல் தொடங்கியது. அக்டோபர் 28 ஆம் தேதிக்கான முன்பதிவு ஜூன் 30 ஆம் தேதியும், அக்டோபர் 29 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 1 ஆம் தேதியும், அக்டோபர் 30 ஆம் தேதிக்கான டிக்கெட் ஜூலை 2 ஆம் தேதியும், அக்டோபர் 31 ஆம் தேதிக்கான டிக்கெட் ஜூலை 3 ஆம் தேதியும் தொடங்கியது. ஆனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: கனமழை எதிரொலி.. இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

தென்னக ரயில்வே மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தாம்பரம் – கன்னியாகுமரி இடையே அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய 3 தினங்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 06049/ 06050 என்ற எண் கொண்ட இந்த ரயிலானது கன்னியாகுமரியில் இருந்து மேற்குறிப்பிட்ட நாட்களில் மதியம் 03.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் ஆனது இயக்கப்பட உள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7 ஆம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:20 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக 07:30 க்கு புறப்படும் ரயில் காலை 9:30க்கு சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட்ட உள்ளது. இந்த ரயில் சென்னையிலிருந்து அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5ஆம் தேதியும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 30 ஆம் தேதியும், நவம்பர் 6 ஆம் தேதியும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு விநாயகர், லட்சுமி சிலை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை தவிர்த்து சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்கள் அதாவது பெங்களூரு, மங்களூரு, யஷ்வந்த்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடாங்கியதுமே அனைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Latest News