“இபிஎஸ் அண்ணன் OK சொன்னா போதும்” களத்தில் குதிக்கும் விஜய பிரபாகரன்
தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஒகே சொன்னால் போதும். எந்த ego-வும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக இருக்கிறேன் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு நிழலாக நின்று வேலை செய்ய தயராக இருக்கிறேன். கூட்டணிக்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஒகே சொன்னால் போதும். எந்த ego-வும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக இருக்கிறேன் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நேற்று தேமுதிக கட்சியின் 20ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விஜயபிரபாகரன் பேசினார். அதன்படி, “எடப்பாடி பழனிசாமி அண்ணன் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. அடுத்த வரும் காலம் இளைஞர்களின் காலமாக இருக்கிறது. எனவே, இளைஞர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்று கூறினார். கேப்டன் விஜயகாந்த் எங்கள் அனைவரும் கற்றுக் கொடுத்தது கூட்டணி தர்மம்.
களத்தில் குதிக்கும் விஜய பிரபாகரன்
இந்த கூட்டணி தர்மத்திற்காக அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஒகே சொன்னால் எந்த ego-வும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக இருக்கிறேன். நான் பெரியவர்கள், நீங்கள பெரியவர்கள் என எந்தஒரு ego-வும் இல்லாமல் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு நிழலாக நின்று வேலை செய்ய தயராக இருக்கிறேன். கூட்டணிக்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த், எம்ஜிஆர் ஆகியோர் ஆரம்பித்த தேமுதிக அதிமுக ஆகியவை தான் மக்கள் கட்சி. அவை தான் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
20ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக:
தேமுதிக கட்சி நிறுவனர், எதிர்க்கட்சி தலைவர் என பிரபல அரசியல் தலைவராகவும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தனது 71 வயதில் காலமானார். கர்ஜிக்கும் குரலுடன் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்களை சென்ற ஆண்டு இறுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
விஜயகாந்தால் தொடங்கப்பட்ட கட்சி 19 ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தேமுதி கட்சியை தொடங்கிய விஜயகாந்த், 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டார். எந்த கட்சியிலும் கூட்டணி இல்லாமல் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தேமுதிக, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. சுமார் 8.50 சதவீத வாக்குகள் பெற்றது.
Also Read: “சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்” உதயநிதி மீது பவன் கல்யாண் மறைமுக விமர்சனம்!
இந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் விஜயகாந்த் நுழைந்தார். இதனை தொடர்ந்து 2009ல் நடந்த மக்களவை தேர்தலிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது தேமுதிக. 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கட்சி, தமாகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் போட்டியிட்டார். ஆனால், தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதைத் தொடர்ந்து, 2021 தேர்தலில் அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதத்தை பெற்றது. இப்படி கட்சி மிகவும் பலவீனமானது. மறுபுறம் விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமானது. இந்த சூழலில் தான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விஜயகாந்த் காலமானார்.
அடுத்த சில மாதங்களில் நடந்த மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தோல்வியை சந்தித்தார். இது மிகவும் கட்சி தொண்டர்களுக்கு எமாற்றத்தை அளித்தது.