Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. புறக்கணிக்கும் தேமுதிக.. இபிஎஸ் வழியில் பிரேமலதா! - Tamil News | | TV9 Tamil

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. புறக்கணிக்கும் தேமுதிக.. இபிஎஸ் வழியில் பிரேமலதா!

Updated On: 

16 Jun 2024 16:31 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.  இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றைய ஆட்சியாளர்கள் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. புறக்கணிக்கும் தேமுதிக.. இபிஎஸ் வழியில் பிரேமலதா!

பிரேமலதா

Follow Us On

இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி, திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில்,   விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

Also Read: ”எண்ணிலடங்கா அனிதாக்கள்.. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்” முதல்வர் ஸ்டாலின்!

 விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கும் தேமுதிக:

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றைய கால கட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது. இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.

இன்றைய ஆட்சியாளர்கள் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், தற்போது தேமுதிகவும் புறக்கணித்துள்ளது.

Also Read: மீண்டும் அதிகரிக்கப்போகும் வெப்பம்.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

 

 

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version