5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மறு ஓட்டு எண்ணிக்கை.. டெல்லியில் மனு.. தீவிரம் காட்டும் விஜய பிரபாகரன்

Vijaya Prabhakaran : தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகர் நல்ல வாக்குகளை பெற்றிருந்தனர். குறிப்பாக விஜய பிரபாகர் களத்தில் வெற்றி வீரராக தன்னுடைய அத்தனை முயற்சிகளையும் எடுத்து கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதியாக நான் சொல்கிறேன் விஜய பிரபாகர் தோல்வி அடையவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்றார். இந்நிலையில் விஜய பிரபாகரன் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்

மறு ஓட்டு எண்ணிக்கை.. டெல்லியில் மனு.. தீவிரம் காட்டும் விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்
c-murugadoss
CMDoss | Published: 13 Jun 2024 11:09 AM

தான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டுமென வலியுறுத்தி தேமுதிக வேட்பாளரும், மறைந்த விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரன் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஓட்டு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை. 2 மணி நேரத்திற்கு மேல் உணவு இடைவேளை நீட்டிக்கப்பட்டது. தபால் ஓட்டுகள் இரவில் எண்ணப்பட்டன. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளோம். ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் கோரிக்கைகளை தேர்தல் நடத்திய அதிகாரிகள் ஏற்கவில்லை. அது மன அழுத்தத்தை தந்துள்ளது. அந்த வலியின் வெளிப்பாடாகவே, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன்” என்றார்.

விருதுநகர் தொகுதி:

2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமாரின் மனைவியுமான நடிகை ராதிகாவும், அதிமுக சார்பில், மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும், திமுக – காங்கிரஸ் சார்பில், விருதுநகர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி கண்ட மாணிக்கம் தாகூர் போட்டியிட்டனர். இதில், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் 3 லட்சத்து 79 ஆயிரத்து 305 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக, தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,74,511 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

Also Read : சாரைப் பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர்.. அதிரடி காட்டிய வனத்துறை!

பிரேமலதா குற்றச்சாட்டு:

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகர் நல்ல வாக்குகளை பெற்றிருந்தனர். குறிப்பாக விஜய பிரபாகர் களத்தில் வெற்றி வீரராக தன்னுடைய அத்தனை முயற்சிகளையும் எடுத்து கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதியாக நான் சொல்கிறேன் விஜய பிரபாகர் தோல்வி அடையவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார். வளர்ச்சியடையவில்லை வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. இது அத்தனை மக்களுக்கும், அத்தனை ஊடகங்களை சேர்ந்தவருக்கும, தமிழகத்தில் இருக்கும் அத்தனை மக்களுக்கும் இது தெரியும். இன்றைக்கு விஜய பிரபாகர் முதன்முறையாக தேர்தல் களத்தில் சிறுவயதிலேயே நின்றுள்ளார்.

கேப்டன் இல்லாத கவலையை நாங்கள் மறக்கவில்லை அந்த சோகத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை, அவர் முதலில் நான் இந்த தேர்தலில் நிற்கவில்லை எனக்கு இன்னும் அப்பா நியாபகம் தான் இருக்கிறது. ஆனால், எங்களுடைய மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் நீங்கள் இந்த முறை போட்டியிட வேண்டும் அப்பா இல்லாத பொழுது விருதுநகரில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டதால் தான் அவர் போட்டியிட்டார். ஆனாலும் கடைசி வரைக்கும் அவர் தனது முயற்சியை யாரும் கைவிடவில்லை என்றார்.

Latest News