DMK Alliance : திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை விமர்சித்த விசிக துணை பொதுச்செயலாளர்.. ஆ.ராசா பதில் கருத்து!
VCK Vs DMK | சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆக்கும்போது, திருமாவளவன் ஏன் ஆக முடியாது. வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயளாலர் ஆதவ் அர்ஜுன, சமீபத்தில் தங்களது கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தற்போது, அர்ஜூனா பங்கேற்று பேசிய நேர்காணலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா அது குறித்து எதிர்வினை ஆற்றியுள்ளார். கூடணி கட்சிகள் குறித்து ஆதவ் அர்ஜுன பேசியது என்ன, அதற்கு ஆ.ராசாவின் என்ன பதில் அளித்திருந்தார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Donald Trump : வெற்றி பெறவில்லை என்றால் இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும்.. டொனால்ட் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!
ஆதவ் அர்ஜுன கருத்துக்கு ஆ.ராசா பதில்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆக்கும்போது, திருமாவளவன் ஏன் ஆக முடியாது. வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார். அவர் பேசிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜுனாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை கல்லூரி காலம் முதலே நன்கு அறிவேன். கடந்த 40 ஆண்டுகளாக நல்ல பழக்கம் இருக்கிறது. மாணவர் பருவத்திலேயே இருவரும் ஒன்றாக மேடை ஏறி பல்வேறு சமயங்களில் பேசி இருக்கிறோம். அவரது இடது சாரி சிந்தனை இன்றைக்கு இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது என்பதை நானும் தமிழகம் முதல்வரும் மு.க. ஸ்டாலினும் பெருமிதம் கொள்கிறோம்.
இதையும் படிங்க : Harassment : கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்ற கொடூரம்!
இன்றைக்கு மதவாதத்தை ஒழிப்பதில், சமூக நீதியை பாதுகாப்பதில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் தோள் கொடுப்பதில் ஒரு நல்ல அரசியல் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. அந்த இடதுசாரி சிந்தனையில் இருந்து சிறிதும் வழுவாமல் இருக்கிற அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன் என்பதில் எனக்கோ எங்கள் தலைவருக்க, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ இரண்டு விதமான கருத்துக்கள் இருந்ததில்லை. இந்த சூழலில் இப்படிப்பட்ட கருத்தை வீசிகவில் புதிதாக சேர்ந்திருக்கிற ஒருவர் கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பதாக நான் பார்க்கிறேன்.
இது கூட்டணி அறத்திற்கு, அரசியல் அரணுக்கு ஏற்புடையது அல்ல. இடதுசாரி சிந்தனை மட்டுமின்றி தமிழ் மொழி, தமிழ் இனம் என்கின்ற வரலாற்று பின்னணி உடன் கூடிய அரசியல் புரிதல் உள்ள் திருமாவளவன் இந்த கருத்தை ஏற்கமாட்டார். அவரது ஒப்புதலோடு பேசியிருக்க மாட்டார் என்பது என்னுடைய எண்ணம். அவர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்திருக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுப்பார் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்.. அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
சமூக நீதிப் பகுத்தறிவு மதசார்பின்மைக்கு எதிரான கொள்கை, தலித் அரசியல் சட்டத்தை காப்போம், சனாதான கொள்கைக்கு எதிராக முழங்குவோம் என்று கூறுகின்ற ஒரே தலைவராக திருமாவளவன் இருக்கிறார். அவர் இப்படிப்பட்ட கருத்தை ஏற்க மாட்டார். உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை எனக்கும் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.