5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

DMK Protest: 3 குற்றவியல் சட்டங்கள் – ”நாட்டை சர்வாதிகார தன்மை நோக்கி நகர்த்தும்” – அமைச்சர் துரைமுருகன்..

மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சிபிஐ மாநிலச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இது தொடர்பாக பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “ எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களும், இந்த நாட்டை சர்வாதிகாரத் தன்மையை நோக்கி நகர்த்தவே வழிவகுக்கும்” என தெரிவித்துள்ளார்.

DMK Protest: 3 குற்றவியல் சட்டங்கள் – ”நாட்டை சர்வாதிகார தன்மை நோக்கி நகர்த்தும்” – அமைச்சர் துரைமுருகன்..
அமைச்சர் துரைமுருகன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Jul 2024 19:20 PM

திமுக உண்ணாவிரத போராட்டம்: மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக, சென்னையில் இன்று திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டமானது தற்போது நிறைவு பெற்றுள்ளது. நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த 3 சட்டங்களுக்கான கடும் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

Also Read: 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல்.. தீவிர ஆலோசனையில் நிர்மலா சீதாராமன்..

மேலும், குற்றவியல் சட்டங்களில் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்குவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் சட்டங்களுக்கு பெயரிடுவது, விவாதமின்றி மாநில அரசுகளின் கருத்தை கேட்காமல் சட்டங்களை கொண்டு வருவது போன்றவற்றுக்கு எதிர்ப்பு இருந்தது. புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களிடம் பெண் போலீஸ் அதிகாரிகள், பாதுகாவலர் அல்லது உறவினர் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அந்த பெண்களிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட வேண்டும். இப்படி பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது.


அந்த வகையில் இந்த மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சிபிஐ மாநிலச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இது தொடர்பாக பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “ எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களும், இந்த நாட்டை சர்வாதிகாரத் தன்மையை நோக்கி நகர்த்தவே வழிவகுக்கும்” என தெரிவித்துள்ளார். காலை முதல் நடைபெற்ற உண்னாவிரத போராட்டம் மாலை நிறைவு பெற்றது.

Also Read: ஆம்ஸ்ட்ராங் உடலை கண்டு கதறி அழுத திருமா.. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை..

Latest News