5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Minister Ponmudi: என்னாது பொன்முடிக்கு சீட் இல்லையா? அவரே சொன்ன தகவல்.. திமுகவின் திட்டம் என்ன?

அமைச்சர் பொன்முடி: வரும் 2026 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் எனக்கே சீட் கிடைக்காமல் போகலாம் எனவும் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.  விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பொன்முடி பேசியுள்ளார். இவர் கூறியது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

Minister Ponmudi: என்னாது பொன்முடிக்கு சீட் இல்லையா? அவரே சொன்ன தகவல்.. திமுகவின் திட்டம் என்ன?
அமைச்சர் பொன்முடி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Oct 2024 19:09 PM

வரும் 2026 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் எனக்கே சீட் கிடைக்காமல் போகலாம் எனவும் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.  விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பொன்முடி பேசியுள்ளார். இவர் கூறியது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கௌதமசிகாமணி, வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

2026 தேர்தலில் பொன்முடிக்கு சீட் இல்லையா?

அதாவது, ”வரக்கூடிய 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும். எனது அனுபவத்தில் சொல்றேன். நான் 8 முறை தேர்தலில் நின்று 6 முறை பெற்றவன் என்பதால் எனது அனுபவத்தில் கூறுகிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்.

Also Read: சுடச்சுட பிரியாணி.. தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்ட முதல்வர்!

எனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் யாரை தேர்தலில் வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்காக நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்பதை சொல்லுகிறேன். இதனை நினைவு வைத்துக் கொண்டு அனைவரும் தேர்தலுக்காக உழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  வரும் தேர்தலில் தனக்கே சீட் கிடைக்காது  என்று பொன்முடி கூறியது பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.

திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவில் இருப்பவர் பொன்முடி. 1984ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர், 1989ஆம் ஆண்டு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு முதல் 8 முறை தேர்தலில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 1989 ஆம் ஆண்டு முதல் விழுப்புரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்முடி, கடந்த இரண்டு தேர்தலிலும் திருக்கோயிலூரி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே இவர் அமைச்சர் பதவிலும் இருந்து வருகிறார். கடந்த 2021ஆம் தேதி சட்டமன்ற தேர்தலி திருக்கோயிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், மீண்டும் உயர்க்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

பொன்முடி:

இதனிடையே 2006-2011 காலக்கட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதனால் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். பொன்முடி வகித்த உயர்க்கல்வித்துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து, கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில், மீண்டும் உயர்க்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

Also Read: நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னைக்கு எப்படி?

இந்த நிலையில், கடந்த மாதம் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. பொன்முடியிடம் இருந்த உயர்க்கல்வித்துறை பறிக்கப்பட்டு, வனத்துறை அவருக்கு வழங்கப்பட்டது. முக்கிய துறையில் இருந்து பொன்முடி மாற்றப்பட்டது அவரது தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொன்முடி மீதான அதிருப்தி காரணமாக முதல்வர் ஸ்டாலின் இதனை செய்துள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Latest News