Thol Thirumavalavan: அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்.. திமுக கொடுத்த ரியாக்ஷன்!
Viduthalai Chiruthaigal Katchi: தமிழக அரசியலை பொறுத்தவரை தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தின் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
தொல் திருமாவளவன்: விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலை பொறுத்தவரை தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தின் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தார்.
விளக்கம் கொடுத்த திருமாவளவன்
இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கையை அறிவிக்க வேண்டும். மதுவிலக்கால் ஏற்படும் நிதி இழப்பை சரி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என தெரிவித்தார். மேலும். “தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வைக்கும் கோரிக்கை மதுக்கடைகளை முற்றிலுமாக மூட கால அட்டவணை அறிவிக்க வேண்டும் என்பதுதான். மனித வளத்தை முற்றிலுமாக பாதிக்கக்கூடிய மதுவை அரசை விற்பனை செய்வது தேசத்துக்கு விரோதமான செயலாகும். 2016 தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த தேவையான செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும்” எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன். “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் போது மதுக்கடைகளை மூடுவதில் அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது என தெரியவில்லை. இதில் திமுகவும் அதிமுகவும் விதிவிலக்கல்ல. எனவே தயக்கம் உள்ளவர்கள் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய அவசியம் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் வேறானது.
ஆனால் நாங்கள் மக்களின் பிரச்சினைக்காக மதம் மற்றும் சாதியவாத சக்திகளை தவிர்த்து எந்த சக்தியுடன் இணைவோம். இந்த விசிக மது ஒழிப்பு மாநாடு மூலம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரும் வகையில் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் அதிமுகவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதால் திமுகவினரிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read: Australia: சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியா அரசு அதிரடி முடிவு!
அதிமுக கொடுத்த ரியாக்ஷன்
இதனிடையே மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததை அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் , செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் வரவேற்றுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மது ஒழிக்கப்பட வேண்டும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அசைக்க முடியாத கொள்கையாகும். அதிமுகவின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதே கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் ஆண்டுதோறும் மூடப்பட்டு வந்தது. தற்போது இந்த நிலைப்பாட்டை விசிக தலைவர் திருமாவளவன் எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்வது குறித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இறுதி முடிவு எடுத்து விரைவில் தெரிவிப்பார்” என கூறினார்.
திமுகவினர் கொடுத்த பதில்
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் விசிக, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மது ஒழிப்பு மாநாட்டில விசிக அழைத்த நிலையில் அதிமுக பங்கேற்பது அவர்களுடைய விருப்பம். அதைப் பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என தெரிவித்தார். இதே கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியம் பதிலளிக்கும்போது, “விசிக அழைத்து அதிமுக சென்றால் நல்ல விஷயம் தானே! நல்ல விஷயத்துக்காக ஒன்றாக சேர்ந்தால் நல்லது. அரசே மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது” என கூறினார். இதனால் கூட்டணி முறிவு ஏற்படுமா என்ற கேள்விக்கு, “2017 இருந்து 2024 வரை திமுக கூட்டணியில் தொடர்ந்து விசிக பிசிறில்லாமல் தொடர்ந்து வருகிறது.” என தெரிவித்தார்.