DMK Protest: நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவர் அணி இன்று ஆர்ப்பாட்டம்.. முழு விவரம்..

நீட் தேர்வு என்பதே சமூகநீதி, சமத்துவம், சமவாய்ப்பு, ஏழை எளிய மாணவர்களுக்கு பாதிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு போன்ற காரணங்களுக்காக தான் ஆரம்ப நாள் முதலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக நீட் தேர்வை எதிர்த்து வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

DMK Protest: நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவர் அணி இன்று ஆர்ப்பாட்டம்.. முழு விவரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

03 Jul 2024 07:58 AM

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்: தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரக, மாணவர் அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொள்ள உள்ளனர். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதும், மாணவர்களை வஞ்சிக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈட்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று திமுக தரப்பில் இந்த ஆரப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் வரும் 6 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கிரெடிட் கார்டு பில் பேமெண்டில் மாற்றம்.. இனி இதுதான் நடைமுறை!

இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை, சமத்துவம் இல்லாத தேர்வு முறை, கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை, அவர்களது கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை, அவர்களது மருத்துவ கனவைச் சிதைத்து, நீ டாக்டர் ஆக முடியாது என்றும், உனக்கு தகுதியில்லை என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது.

மேலும், நீட் தேர்வு என்பதே மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது வினாத் தாள்களை திருடுவது, விடைத்தாள்களை மாற்றி வைப்பது, மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் திமுக நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வு என்பதே சமூகநீதி, சமத்துவம், சமவாய்ப்பு, ஏழை எளிய மாணவர்களுக்கு பாதிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு போன்ற காரணங்களுக்காக தான் ஆரம்ப நாள் முதலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்.

அந்த வகையில் திமுக மாணவர் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தொடர் போராட்டங்களையும், தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மூலம் பல்வேறு விவாதங்கள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என அனைத்து அறப்போராட்டங்களையும் மாணவர் அணி முன்னெடுத்து நடத்தி உள்ளது.
பாஜக அரசு நீட் தேர்வினை 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது முதல் திமுக கடுமையாக எதிர்த்து வந்தது. தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது.

தற்போது நீட் தேர்வில் உள்ள மோசடிகள் மற்றும் குளறுபடிகளை உணர்ந்த பாஜகவை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர்.

நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதை தான் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் பாஜக அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் வரும் ஜூலை 3ஆம் தேதியன்று காலை 09.00 மணியளவில் சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: வாகன நம்பர் பிளேடில் ஸ்டிக்கர் – அறிக்கை தர ஆணை.. உயர்நீதிமன்றம் அதிரடி..

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?