5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கர்ப்பிணிகளுக்கு ரூ.16000.. டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்?

DR. Muthulakshmi reddy scheme: ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற பின் முதல் 3 மாதத்திற்குள் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று PICME நம்பரை வாங்க வேண்டும். அந்த நம்பர் இருந்தால் தான் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற முடியும். குறிப்பாக இந்த திட்டம் ஏழை எளிய பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அவர்களுக்கு முதல் 3 மாதங்களுக்குள் சத்துமாவு, சத்து பிஸ்கட், ஒரு கிலோ பேரிச்சம் பழம், 500 கிராம் நெய் அடங்கிய பெட்டகம் கொடுக்கப்படும். அவர்கள் மகப்பேறு காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த 2000 ரூபாய் மதிப்புள்ல பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 16,000 ரூபாய் ரொக்கமாக கொடுக்கப்பம். மீதம் 4000 ரூபாய் பெட்டகமாக வழங்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு ரூ.16000.. டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்?
மாதிரிப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Oct 2024 14:17 PM

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்: மகப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமான காலக்கட்டமாகும். பாதுகாப்பாக இருப்பதும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை அவசியம். அப்படி ஒரு பெண் கருவுற்ற காலம் தொடங்கி, பிரசவம், குழந்தை பிறந்து 16 வயது வரை போட வேண்டிய தடுப்பூசி என அனைத்தையும் அரசு அட்டவணை போட்டு வைத்துள்ளது. அதேபோல் கருவுற்ற பெண்களுக்காக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது. ஒரு பெண் கருவுற்ற பின் முதல் 3 மாதங்களுக்குள் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தனது பெயரை பதிவு செய்ய வேண்டும். அப்போது அந்த பெண்ணின் முழு விவரம், கருவுற்ற தேதி, பிரசவ தேதி, குழந்தையின் வளர்ச்சி, ரத்த பரிசோதனைகள், ஹீமோகுளோபின் அளவு, பெண்ணின் உடல் நிலை குறித்த அனைத்து புள்ளி விவரங்களும் மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு (Pregnancy Infant Cohort Monitoring Evaluation (PICME) என்பதில் சேமிக்கப்படுகிறது. இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?

அதே சமயம் கருவுற்று இருக்கும் ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதமாக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கிழ் யார் பயன் பெற முடியும், யார் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. இது குறித்து விளக்குகிறார் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் இயக்குனர் கலைவாணி. இது தொடர்பாக நாம் பேசிய போது, ” ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற பின் முதல் 3 மாதத்திற்குள் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று PICME நம்பரை வாங்க வேண்டும். அந்த நம்பர் இருந்தால் தான் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற முடியும். குறிப்பாக இந்த திட்டம் ஏழை எளிய பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அவர்களுக்கு முதல் 3 மாதங்களுக்குள் சத்துமாவு, சத்து பிஸ்கட், ஒரு கிலோ பேரிச்சம் பழம், 500 கிராம் நெய் அடங்கிய பெட்டகம் கொடுக்கப்படும். அவர்கள் மகப்பேறு காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த 2000 ரூபாய் மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்படுகிறது.

Also Read: மாடு முட்டி அரசு பேருந்து ஏறி ஒருவர் உயிரிழப்பு.. நெல்லை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..

அதனை தொடர்ந்து 4 ஆம் மாதம் முதல் 10 ஆம் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 2000 ரூபாய் ரொக்கமும், 2000 ரூபாய் மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகமும் வழங்கப்படும். அதன்பின் அரசு மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பிறந்த உடன் கருத்தடை சாதனமான லூப் வைக்கப்படும். அதன் பின் அவர்களுக்கு ரூ. 4000 ரொக்கம் வழங்கப்படும். பின் குழந்தைக்கு முதல் 3 முதல் 4 மாதங்கள் வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்ட பிறகு ரூ. 4000 ரொக்கம் வழங்கப்படும். கடைசியாக குழந்தைக்கு 9 மாதம் ஆன பின் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்படும். அந்த தடுப்பூசி செலுத்திய பின் கடைசி தவனையாக ரூ. 2000 வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் இல்லை?

இந்த திட்டத்தில் மொத்தம் 16,000 ரூபாய் ரொக்கமாக கொடுக்கப்பம். மீதம் 4000 ரூபாய் பெட்டகமாக வழங்கப்படும். இந்த திட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். வீட்டிலிருந்து பிரசவம் பார்ப்பது, குழந்தை இறப்பை தடுக்க அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு இது பொருந்தாது. இருப்பினும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் பெண்கள் கட்டாயம் ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்து PICME நம்பரை பெற வேண்டும். இது தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் கருவுற்ற பெண்களின் விவரங்களை சேகரிக்க உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மகப்பேறு மருத்துவர் சாந்தி, “ இந்த திட்டமானது ஏழை எளிய பெண்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் கொண்டுவரப்பப்படடது. ஏழை எளிய பெண்கள் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் போது இந்த திட்டத்தின் முழு பலனும் கிடைக்கும். நடுவில் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துடன் மத்திய அரசு திட்டம் இணைக்கப்பட்டதால் சில குழப்பங்கள் நிலவுகிறது.

குறிப்பாக இந்த ரொக்க பணம் பெறுவதில் குழப்பம் நீடிக்கிறது. சில சமயங்களில் மத்திய அரசு பணம் கொடுத்தால் மட்டுமே தமிழ்நாடு அரசு சார்பில் பணம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக சில பெண்களுக்கு இந்த திட்டம் முழுமையாக சென்றடைவதில்லை. அதேபோல், மத்திய அரசு திட்டத்தின் கீழ் முதல் குழந்தைக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லும் போன்ற பல்வேறு விதிமுறைகள் மாறுப்பட்டிருப்பதால் குழப்பங்கள் நீடிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனியார் மருத்துவமனையில் செக்கப், ஸ்கேன் செய்து மருத்துவம் பார்க்கும் கர்ப்பிணிகளும் அரசு மருத்துவமனையில் PICME நம்பரை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். அல்லது ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்யலாம். அப்படி ரிஜிஸ்டர் மட்டும் செய்து அந்த நேரத்தில்மட்டும் இரத்த பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு பரிசுபெட்டகம், பணத்தொகை எதுவுமே கிடைக்காது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் செக்கப் செய்து தொடர்ந்து பரிசோதனை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்கும்.

Also Read: 18 வயதிலேயே அந்தக் கொடுமை… இஷா கோபிகர் வேதனை

Latest News