கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர்.. உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான வீடியோ

Chennai Doctor Attack: சென்னை கிண்டி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரது மகன் இந்த கொடூர செயலை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர்.. உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான வீடியோ

தாக்கப்பட்ட மருத்துவர்

Updated On: 

13 Nov 2024 16:51 PM

சென்னை கிண்டி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரது மகன் இந்த கொடூர செயலை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் மருத்துவரிடம் நலம் விசாரித்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில் மருத்துவர் பாலாஜி தலையில் கட்டுகளுடன் இருந்துள்ளார். அவரின் பக்கத்தில் சென்று ஜெயக்குமார் நலன் விசாரித்தார். மேலும், பாலாஜிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஜெயக்குமாரிடம் மருத்துவர் விளக்கினார். மேலும், ஜெயக்குமார் பாலாஜியிடம் உடல்நிலை குறித்து கேட்டார்.

Also Read : மருத்துவருக்கு 7 முறை கத்திக்குத்து.. சொட்ட சொட்ட ரத்தம்.. அரசு மருத்துவமனையில் நடந்த திக்திக் சம்பவம்!

நடந்தது என்ன?

சென்னை பெருங்களத்தூரைத் சேர்ந்த காஞ்சனா என்ற பெண் கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண்ணுக்கு விக்னேஷ் என்ற 26 வயதான மகன் உள்ளார். அவர் தனது தாயரை அருகில் இருந்து கவனித்து வந்துள்ளார்.

இதுவரை விக்னேஷ் தாய்க்கு ஆறு முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தாய் காஞ்சனா மருத்துவமனைக்கு வரும்போதே புற்றுநோய் முற்றி இருந்ததாகவும், இதனால் கீமோ கொடுக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கீமோ கொடுக்கப்பட்ட பிறகும் நுரையீரல் வரை புற்றுநோய் பரவியது.

இதனால் அவரது தாயாருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்துள்ளதாக தெரிகிறது. அந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று அவரது தாயாரை பார்ப்பதற்காக 3 நண்பர்களுக்கு வந்துள்ளார்கள்.

அந்த நண்பர்களை அழைத்து கொண்டு அவர், புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவரை திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். மருத்துவரின் கழுத்து, தலை, மார்பு என மூன்று இடங்களில் 7 முறை குத்தியுள்ளார். இதனால் அவர் நிலைகுலைந்து சாய்ந்துள்ளார்.

மருத்துவரின் உடல்நிலை எப்படி இருக்கு?

அவரை குத்திய விக்னேஷ் மற்றும் நண்பர்கள் அங்கிருந்து ஒடினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற மருத்துவர்களும், ஊழியர்களும் நோயாளிகளும் பதறி அடித்து ஓடினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.

மேலும், கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய விக்னேஷை மடக்கி பிடித்து கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மருத்துவர் பாலாஜியை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என சாடியுள்ளனர். இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டுள்ளார்.

Also Read : அடுத்த 4 நாட்களுக்கு கனமழை அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை!

தாக்கியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனி மேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்போம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 6 மாதமாக அவர் இந்த மருத்துவமனைக்கு தாயாருடன் வந்துள்ளார். ஆதலால் அவர் மீது எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை. மருத்துவர் பாலாஜிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கொடுத்து அவரை மீட்டெடுப்பதை எங்கள் முதல் பணி. அனைத்து மருத்துவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படும்” என்றார்.

கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
செலரி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!