Crime: பணியில் இருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து.. வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு!

மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு சக மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மருத்துவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக கிண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Crime: பணியில் இருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து..  வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

13 Nov 2024 14:42 PM

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல மருத்துவர்கள் பணியில் இருந்தனர். அப்போது காலை 10.30 மணியளவில் புற்றுநோயியல் நிபுணர் பாலாஜியின் அறைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக  கத்தியால் குத்தினர். மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு சக மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மருத்துவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக கிண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருத்துவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் கைது செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அந்த கும்பல் மருத்துவரை தாக்கியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.அதேசமயம் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: Crime: சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வெட்டிக்கொலை.. ராமதாஸ் கடும் கண்டனம்!

முதலமைச்சர் கடும் கண்டனம்

இதனிடையே கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் நேரம் காலம் பார்க்காமல் அரசு மருத்துவர்கள் செய்யும் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து விடுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்

அதேசமயம் மருத்துவர் மீது தாக்குதல் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.

Also Read: Tiruvarur: தூய்மை பணியாளர் மகள் டூ நகராட்சி ஆணையர்.. மன்னார்குடி துர்காவின் வெற்றி கதை!

வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு 

இந்நிலையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2 பேர் சிக்கியது எப்படி?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று காலை வழக்கம் போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது திடீரென மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடைபெற்றவுடன் அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது பாலாஜி இருந்த அறையில் இருந்து வந்தவர்களை சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். இதில் இருவர் சிக்கிய நிலையில்  உடனடியாக கிண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த கத்திக்குத்து சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் மருத்துவர்கள் மீது பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்டி நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்
இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!