Shocking News : திடீர் மாரடைப்பு.. குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரிழந்த ஓட்டுநர்.. சோக சம்பவம்!

Driver Died | நேற்று (24.07.2024) மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை வீட்டிற்கு வேனில் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, மலையப்பன் ஸ்டேரிங் மீது மயங்கி விழுந்துள்ளார்.

Shocking News : திடீர் மாரடைப்பு.. குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரிழந்த ஓட்டுநர்.. சோக சம்பவம்!

உயிரிழந்த மலையப்பன்

Updated On: 

11 Nov 2024 10:51 AM

மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோயில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் மலையப்பன். இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக, வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (24.07.2024) மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை வீட்டிற்கு வேனில் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, மலையப்பன் ஸ்டேரிங் மீது மயங்கி விழுந்துள்ளார்.

வேன் ஸ்டேரிங் மீது மயங்கி விழுந்த மலையப்பன்

சேமலையப்பன் ஸ்டேரிங் மீது மயங்கி விழுந்திருப்பதை கண்டு அதிர்சியடைந்த மாணவர்கள் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் அலறி துடித்துள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், லையப்பனை மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மலையப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : Viral Video : ஆர்டர் செய்த உணவை திருட்டுத் தனமாக பிரித்து சாப்பிட்ட டெலிவரி பாய்.. கையும் களவுமாகப் பிடித்த நபர்!

மலையப்பனுக்கு இரங்கள் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்ற சாலை ஓரம் வேனை நிறுத்திவிட்டு உயிரிழந்த மலையப்பனின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மலையப்பனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயம் மிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார் என்று பதிவிட்டுள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்த மலையப்பனுக்கு லலிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஹரிஹரன், ஹரிணி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேமலையப்பன், பள்ளி வேன் ஓட்டிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Mayor Election : கோவை, நெல்லை-க்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி.. மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?