5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கடந்த 10 மாதத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் – விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக ஒன்றிய அரசின் Council for Leather Exports, India, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து நடத்தும் Soles for Souls Marathon 2024 போதை பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாராத்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. 10 கி.மீ. 5 கி.மீ. 3 கி.மீ என்கின்ற தூரங்களுக்கான மாரத்தான் விடியற்காலை 5.30 மணிக்கு தொடங்கப்பட்டு இதில் ஏறத்தாழ 10,000 பேர் பங்கேற்றிடும் வகையில் இந்த மாரத்தான் வெற்றிகரமாக நடத்தி முடிவுற்றிருக்கிறது.

கடந்த 10 மாதத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் – விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
மாரத்தான்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 29 Sep 2024 12:44 PM

போதை இல்லா சமூகத்தை உருவாகும் வகையில் தமிழ்நாடு அரசு தரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகை இன்று மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதனை சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “ நிக்கோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்களுக்கு தடையினை தமிழ்நாடு அரசு 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த மே மாதம் 23ஆம் தேதி முதல் கூட அந்த தடையாணை ஓராண்டு நீடிக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு செய்து 391 குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்குமான நடவடிக்கைகள் என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

01.11,2023 முதல் முதல் 2024 செப்டம்பர் 15 வரை தமிழ்நாடு முழுவதும் 3,06,157 கடைகள் மற்றும் குடோன்கள் மற்றும் வாகனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்த 19.822 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் 132890 கிலோ கிராம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பி ரூ.10.87 கோடி ஆகும்.

மேலும் படிக்க: கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதும், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சியாக உறுதிமொழி ஏற்கின்ற நிகழ்வு தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பெருநகர காவல் துறை அதை மிகச் சிறப்பாக மேற்கொண்டு, இன்றைக்கு தமிழ்நாடு முழுவதிலும் காவல்துறையின் சார்பில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று அவை இந்திய அளவிலும், உலக அளவிலும் கூட அந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி பல வழிகளில் இளைஞர்கள் சமுதாயத்தினரிடையே போதைப்பொருள் பழக்கமில்லாத சமூகம் என்பதை உறுதிபடுத்துவதற்கும், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை. உள்ளாட்சித்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மிகச் சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறது.

மேலும் மீண்டும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக ஒன்றிய அரசின் Council for Leather Exports, India, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து நடத்தும் Soles for Souls Marathon 2024 போதை பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாராத்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. 10 கி.மீ. 5 கி.மீ. 3 கி.மீ என்கின்ற தூரங்களுக்கான மாரத்தான் விடியற்காலை 5.30 மணிக்கு தொடங்கப்பட்டு இதில் ஏறத்தாழ 10,000 பேர் பங்கேற்றிடும் வகையில் இந்த மாரத்தான் வெற்றிகரமாக நடத்தி முடிவுற்றிருக்கிறது.

மேலும் படிக்க: அடடே..! இன்று முதல் பூமியில் இரண்டு நிலவுகள் தோன்றும்.. இதனை எப்படி பார்ப்பது?

குறிப்பாக இந்த மாரத்தான் 100% வெற்றி என்று எடுத்துக் கொண்டால் 100% இளைஞர்கள் மற்றும் மாணவர்களாக இதில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பது என்பது எந்த சமூகத்தினருடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமோ, எந்த சமூகத்தினருக்கு இச்செய்தி சென்றடைய வேண்டுமோ அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடி இருப்பது என்பது ஒரு வரலாற்று சிறப்பு” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் எதிர்பார்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் பூர்த்தி செய்துள்ளார். ஆக தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி கொள்கின்ற ஒரு நல்ல நாளாகும். மேலும் அவர் துணை முதல்வராக அறிவிப்பதற்கு முன்பாகவே இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை இன்று உலகளவில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை ஒரு தலைமையகமாகவே மாற்றித்தந்திருக்கிறார்கள்.

விளையாட்டுத்துறையில் அவர் பொறுப்பேற்றபிறகு பிரிவினர் குறிப்பாக வழிகளில் பெருமைப்பட்டிருக்கிறார்கள். பார்முலா 4 என்கின்ற கார்பந்தயம் போட்டிகளாக இருந்தாலும் சரி, வாலிபால் போன்ற போட்டிகளாக இருந்தாலும் சரி, முதலமைச்சர் கோப்பை போன்ற போட்டிகளாக இருந்தாலும் சரி. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திடும் வகையில் இளைஞர் சமுதாயத்தினருக்கு, இளைஞர் சமுதாயத்தின் சக்தி என்பது தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி என்கின்ற அளவில் இருக்கின்றது. இந்த 2 கோடி இளைஞர்களின் விழிப்புணர்வாக அந்த துறையை மிகச் சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

 

Latest News