சைகை காட்டி மோப்ப நாய்… சென்னை ஏர்போர்டில் சிக்கிய ரூ.7.5 கோடி கஞ்சா.. நடந்தது என்ன?
Chennai Aiport: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7.15 கோடி மதிப்பிலான உயர் ரக போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பயணி ஒருவரின் உடையை மோப்ப நாய் மோப்பம் பிடித்து சத்தம் எழுப்பிய நிலையில், ரூ.7.15 கோடி கஞ்சா சிக்கியது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.7.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தார். தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், வேலை செய்யும் இளைஞர்கள் என பலரும் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்தே வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஏர்போர்டில் சிக்கிய ரூ.7.5 கோடி கஞ்சா
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.7.5 கோடி போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக மோப்ப நாய் உதவியுடன் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து சென்னை விமான மூலம் உயர் ரக போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துது.
இதனை அறிந்த அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது அதிகாரிகள் அனைத்து பயணிகளையும் கண்காணித்தனர். அப்போது பயணி ஒருவரின் உடைமையை பார்த்து மோப்ப நாய் சத்தம் எழுப்பியது.
இதையடுத்து, அந்த பயணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து தனியறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது சோதனை செய்த போது, அவரது பையில் உயர் ரக போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
Also Read : நோட் பண்ணுங்க.. மின் கட்டணம் செலுத்துவதில் அதிரடி மாற்றம்.. குழப்பத்தில் பயனர்கள்!
சைகை காட்டி மோப்ப நாய்
இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.7.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த போதைப் பொருள் கடத்தலில் வேறு யாராவது உள்ளார்களா என்ற கோணத்தில் கைதானவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுகிழமை துபாயில் இருந்து ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை கடத்தியதாக ஏர் இந்தியா ஊழியர் உட்பட இரண்டு பேர் கைதாகினர். கடந்த ஞாயிற்றுகிழமை துபாயில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அப்போது 26 வயதான ஏர் இந்தியா ஊழியர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
Also Read: சென்னைக்கு கடத்திய ரூ.1.7 கோடி தங்கம்.. சிக்கிய விமான ஊழியர்.. பரபர வாக்குமூலம்!
இதையடுத்து, அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த ஊழியர் அணிந்திருக்க பேண்ட் பெல்ட் அணியும் பகுதியில் 4 தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டு பிடித்தனர். உடனே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.